twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மம்முட்டி, மோகன்லாலுக்கு கிடைத்த பெரிய கவுரவம்...குவியும் பாராட்டுக்கள்

    |

    திருவனந்தபுரம் : யுஏஇ அரசு வழங்கும் மிகப் பெரிய கவுரவமான யுஏஇ கோல்டன் விசா, மலையாள டாப் ஸ்டார்களான மோகன்லால் மற்றும் மம்முட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கவுரவத்தை பெறும் முதல் மலையாள நடிகர்கள் இவர்கள் தான்.

    Recommended Video

    South Celebrity Then and Now Photoshop Looks | Surya, Ajith, Dulquer Salaman - Shameem Lukman

    Mammooty, Mohanlal to receive UAEs Golden Visa honour

    தங்கள் துறையில் சிறந்த பங்களிப்பை அளிக்கும் முதலீட்டாளர்கள், டாக்டர்கள், இன்ஜினியர்கள், கலைஞர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவிக்கிறது. இந்த விசா வைத்திருப்போர் ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கு இணையாக கருதப்படுவார்கள்.

    கோல்டன் விசா வைத்திருப்போர் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி ஐக்கிய அரபு அமீரத்தில் தங்கவும், வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த கோல்டன் விசா செல்லுபடியாகும்.

    இசை பிரியர்களுக்காகவே முதன் முறையாக... ஏஆர். ரகுமானின் இசை பிரியர்களுக்காகவே முதன் முறையாக... ஏஆர். ரகுமானின்

    2019 ம் ஆண்டு முதல் யுஏஇ அரசு இந்த கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. இந்த விசா பெற்றவர்கள் தேசிய ஸ்பான்சர்ஷிப் இல்லாமலேயே நீண்ட காலம் யுஏஇ.,யில் வசிக்கவோ, படிக்கவோ, தொழில் தொடங்கவோ முடியும். 5 அல்லது 10 ஆண்டுகளுக்கென இந்த கோல்டன் விசா வழங்கப்படுகிறது. அந்த காலத்திற்கு பிறகு இதனை புதுப்பித்துக் கொள்ளவும் முடியும்.

    இதற்கு முன் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய் தத் ஆகியோர் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர். தற்போது இந்த கவுரவம் மோகன்லால் மற்றும் மம்முட்டிக்கு கிடைத்துள்ளது. இந்த கோல்டன் விசாவை பெறுவதற்காக மம்முட்டி ஏற்கனவே துபாய் புறப்பட்டு சென்றுவிட்டார். விரைவில் மோகன்லாலும் துபாய் செல்ல உள்ளார்.

    69 வயதாகும் மம்முட்டி, கடந்த 40 ஆண்டுகளில் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். பல படங்களை தயாரித்துள்ளார். சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை மூன்று முறை பெற்றவர்.

    61 வயதாகும் மோகன்லால் கடந்த 40 ஆண்டு கால திரை வாழ்க்கையில் 340 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பின்னணி பாடகர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல சினிமாவிற்காக பல வகையிலும் தனது பங்களிப்பை அளித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற நாட்டின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார். தற்போது மலையாள திரைப்பட சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார் மோகன்லால்.

    English summary
    mammooty and mohanlal to receive UAE's golden visa honour. For receiving this honour mammooty flew to dubai. after few days mohanlal also go to dubai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X