விஜய் 64... இயக்கப்போவது யார்? கோலிவுட்டில் உலா வரும் ஹாட் நியூஸ்!
நடிகர் விஜய்யின் அடுத்தப் படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: நடிகர் விஜய்யின் அடுத்தப் படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருடைய 63வது படமாகும். நயன்தாரா, விவேக், யோகி பாபு, கதிர், ஜாக்கி ஷெரப் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

மகளிர் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு தளபதி 63 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. சர்காரைப் போலவே இப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஜய்யின் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விஜய்க்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார். அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்து விட்டது. இதனால், விஜய் ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது.
எனவே விஜய் 64 படத்தை இயக்குப் போவது லோகேஷ் கனகராஜ் தான் என்ற பேச்சு கோலிவுட்டில் அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications











