Mankatha Re Release Box Office: 1500 ரூபாய் டிக்கெட்டா?.. மங்காத்தா முதல் நாள் வசூல் கணிப்பு இதோ!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, பிரேம்ஜி, மகத் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படம் பில்லா படத்துக்கு பிறகு அஜித் ரசிகர்களை வேறலெவலில் வைப் ஆக்கிய படம்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான அந்த படம் அஜித் குமாரின் 50வது படமாக வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. அஜித்துக்கு 100 கோடி வசூலை அந்த படம் ஈட்டித் தந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

Mankatha Re Release Advance Ticket Booking status and Box Office details are here

இந்நிலையில், மங்காத்தா ரீ ரிலீஸ் நாளை வெளியாகவுள்ள நிலையில், இப்போதே முன்பதிவு வசூல் வேறலெவலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், 1500 ரூபாய்க்கு எல்லாம் டிக்கெட்டுகள் விற்பனையாவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

மீண்டும் இணைந்த அஜித் ரசிகர்கள்: கேம்பா விளம்பரத்தில் நடித்த அஜித் குமாரை அஜித் ரசிகர்களே திட்ட ஆரம்பித்தனர். ஆனால், மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆகிறது என்று தெரிந்ததுமே அஜித் ரசிகர்கள் ஒன்றுகூடி இந்த படத்தை மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியாக மாற்ற வேண்டும் என்றும் மீண்டும் தியேட்டரில் கொண்டாட வேண்டும் என்கிற முடிவுடன் ஒன்றாக இணைந்துள்ளனர்.

அட்வான்ஸ் புக்கிங் இத்தனை கோடியா?: இதுவரை மங்காத்தா திரைப்படம் அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டும் 1.7 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரோகிணி, கமலா தியேட்டர்களில் வேறலெவல் கொண்டாட்டத்திற்கு அஜித் ரசிகர்கள் ரெடியாகி உள்ளனர். வெங்கட் பிரபு, ஷாலினி உள்ளிட்டோர் ரோகிணி தியேட்டருக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏகே ரேசிங்கிற்காக கேம்பா விளம்பரத்தில் நடித்த அஜித் குமார் மங்காத்தா ரீ ரிலீஸுக்காக ஒரு வீடியோ புரமோஷன் கூட செய்யாதது ரசிகர்களை வருத்தமடைய செய்தாலும், இதெல்லாம் பழகிப்போன விஷயம் என கடந்து விட்டனர். படையப்பா ரீ ரிலீஸுக்காக ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Mankatha Re Release Advance Ticket Booking status and Box Office details are here

1500 ரூபாய் டிக்கெட்டா?: சில பிரபல திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சி அதிகபட்சமாக 1500 ரூபாய் வரை விற்கப்படுவதாக அஜித் ரசிகர்களே சோஷியல் மீடியாவில் புலம்பி வருகின்றனர். படையப்பா ரீ ரிலீஸ் வசூல் மற்றும் கில்லி ரீ ரிலீஸ் வசூலை மங்காத்தா முறியடிக்குமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் அட்டகாசம் ரீ ரிலீஸ் பெரிதாக கலெக்ட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X