twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெள்ள நீரில் படகோட்டியாக மாறிய மன்சூரலிகான்.. பொறந்தா தமிழனாக பொறக்கனும்னு பாட்டு வேற!

    |

    சென்னை : நடிகர் மன்சூரலிகான் தனது வீட்டிற்கு முன் தேங்கி இருக்கும் மழை நீரில் பாட்டு பாடி படகு ஓட்டினார்.

    Recommended Video

    குளம் போல் தேங்கிய மழைநீரில் பாத் டப்பை படகாக்கி மன்சூர் அலிகான் பயணம்.. பாட்டு பாடும் வீடியோ வைரல்

    சென்னையில் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக மாறி இருந்தது.

    கடந்த வாரம் மிரட்டிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடைசி நேரத்தில் திசை மாறியதால் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீர் ஓரளவுக்கு வடிந்து இருந்தது.

    கனமழை

    கனமழை

    இதையடுத்து 26ம் தேதி சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழை நீர் தேங்கி உள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    பல இடங்களில் வெள்ளம்

    பல இடங்களில் வெள்ளம்

    பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளை செய்ய முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். பல சாலைகளில் வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து சென்று வருகின்றன. பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கினா. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

    படகு ஓட்டிய மன்சூரலிகான்

    படகு ஓட்டிய மன்சூரலிகான்

    இந்நிலையில் நடிகர் மன்சூரலிகான், மழையினால் தனது வீட்டிற்கு முன் குளம் போல் தேங்கியுள்ள தண்ணீரில் பாட்டுப்பாடி படகு ஓட்டி இருக்கிறார். இதில், பொறந்தா தமிழ் நாட்டில் பொறக்கனும்...சென்னையில தண்ணியில மிதக்கனும் என்று பாட்டுப்பாடினார்.

    வைரல் வீடியோ

    கையில் துடுப்பை வைத்துக்கொண்டு, துடுப்பு போட்டபடி படகு ஓட்டிய மன்சூரலிகான், இதுதான் தாமிரபரணி ஆறு, இது தான் வைகை ஆறு, இதுதான் காவேரி, பாலாறு என்று கூறியுள்ளார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    English summary
    Mansoor ali khan boat riding in the Chennai rain ,படகுஓட்டி மன்சூரலிகான்
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X