மஞ்சுவை அடை காக்கும் மன்சூர்!
மகா வில்லன் மன்சூர் அலிகான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி, நடித்து, தயாரிக்கும் படம் என்னைப்பார் யோகம் வரும். பட பூஜையன்று ஹீரோவையும், ஹீரோயினையும் கழுதை போல போட்டு போஸ்டர் அடித்தஅடடா என்று ஆச்சரியப்பட வைத்தார் மன்சூர்.
இப்போது படப்பிடிப்பை தொடங்கி போய்க் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பின்போது படு சுவாரஸ்யமானகாட்சிகளைப் பார்க்க முடிகிறதாம். அதாவது படத்தின் நாயகி மஞ்சுவிடம் யாரும் நெருங்கி விடாமல் படுஉஷாராக இருக்கிறாராம்.
அப்புறம் மஞ்சுவுக்கு பக்கத்தில் ஸ்டூலை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்டு தனது பாணியில் வசனத்தைவாசித்துக் காட்டி நடிப்பு சொல்லிக் கொடுக்கிறாராம். மஞ்சுவின் நெஞ்சாங்கூட்டில் இடிக்கும் அளவுக்கு படுநெருக்கமாக உட்கார்ந்து கொண்டு பாய் பாடம் நடத்துவதைப் பார்த்து யூனிட்டே ரசிக்கிறதாம்.
அதேபோல காலையில் மஞ்சுவை கூட்டி வருவதும், ஷூட்டிங் முடிந்தவுடன் ஹோட்டலில் போய் விடுவதும்(விட்டு விட்டு திரும்பி விடுவாரா, இல்லையா என்பதை கன்ஃபர்ம் செய்ய முடியவில்லை, ஸாரி!)மன்சூர்தானாம். இந்தக் கூத்துக்கெல்லாம் என்னப்பா காரணம் என்று யூனிட் பார்ட்டி ஒருவரைக் கூப்பிட்டுகையில் பொறையைத் திணித்து மேட்டரைக் கறந்தோம்.
குடிக்க சூஸ் வேண்டும் என்றாலும் கூட அதையும் மன்சூர்தான் வரவழைத்துக் கொடுக்கிறாராம்.
ஓவர் பாசமா இருக்கே!


Click it and Unblock the Notifications