மரக்கார் படத்தின் சூட்டிங் வீடியோ வெளியீடு... விஜய் சேதுபதியின் திடீர் விசிட்

திருவனந்தபுரம் : நடிகர் மோகன்லாலின் மரக்கார் படம் வரும் 2ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் டைரக்டர் பிரியதர்ஷன்.

தற்போது படத்தின் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட நிகழ்வுகள் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் மோகன்லால்

நடிகர் மோகன்லால்

நடிகர் மோகன்லால் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வரும் டிசம்பர் 2ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ளது. இந்தப் படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள நிலையில் ரசிகர்களின் மிகச்சிறந்த எதிர்பார்ப்பிற்கு படம் உருவாகியுள்ளது. ரிலீசுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.

மரக்கார் படம்

மரக்கார் படம்

மோகன்லாலுடன் மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, பிரபு, அர்ஜூன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் என நட்சத்திர பட்டாளங்கள் இந்தப் படத்தில் காணப்படுகின்றனர். படத்தின் டீசர், ட்ரெயிலர் மற்றும் போஸ்டர்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. ஒடிடியில் ரிலீஸ் செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தற்போது படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வரும் 2ம் தேதி படம் ரிலீசாக உள்ளது.

 சிறப்பான பிரமோஷன்

சிறப்பான பிரமோஷன்

இந்நிலையில் படத்திற்கு தொடர்ந்து பிரமோஷன் அளிக்கப்பட்டு வருகிறது. போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை மோகன்லால் மற்றும் படக்குழுவினர் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட நிகழ்வுகளை தற்போது வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது.

சூட்டிங் வீடியோ வெளியீடு

சூட்டிங் வீடியோ வெளியீடு

200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தை முன்னணி இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இந்நிலையில் படத்தின் பிரம்மாண்டம் இந்த வீடியோவின் மூலம் வெளிப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சிக்கும் படக்குழுவின் மெனக்கெடல் இந்த வீடியோ மூலம் தெரியவருகிறது.

விஜய் சேதுபதி விசிட்

விஜய் சேதுபதி விசிட்

மேலும் இந்த சூட்டிங்கின்போது நடிகர் விஜய் சேதுபதி திடீர் விசிட் செய்ததும் இந்த வீடியோவின்மூலம் தெரியவருகிறது. படத்தின் சூட்டிங்கை அவர் ஆர்வத்துடன் பார்த்து ரசிப்பதும் தொடர்ந்து மோகன்லாலுடன் கைக்கோர்த்து நட்பு பாராட்டுவதுமாக வீடியோவில் காணப்படுகிறது. மொத்தத்தில் இந்த வீடியோ ரசிகர்களை உற்சாகம் கொள்ள செய்துள்ளது.

Recommended Video

V-CONNECT | ACTRESS KOMAL SHARMA CHAT | என்னோட VOICE அப்பிடித்தான் | FILMIBEAT TAMIL
 மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்

மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்


தமிழிலும் இந்தப் படம் வரும் 2ம் தேதி மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற பெயரில் வெளியாக உள்ளது. இதுகுறித்து நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து மேலும் உற்சாகம் தெரிவித்துள்ளார். தமிழில் தயாரிப்பாளர் தாணு இந்தப் படத்தை வெளியிடுகிறார். தமிழிலும் இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X