»   »  எனக்கு அதுவும் நடக்கலை; 'எது'வும் நடக்கலை.. சல்மான் கான் லந்துப் பேச்சு!

எனக்கு அதுவும் நடக்கலை; 'எது'வும் நடக்கலை.. சல்மான் கான் லந்துப் பேச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனக்கு திருமணமும் நடக்கவில்லை, அதுவும்(செக்ஸ்) நடக்கவில்லை என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் இரண்டாவது தம்பி சொஹைல் கான் ஃப்ரீக்கி அலி என்ற காமெடி படத்தை இயக்கி நடித்துள்ளார். அவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள இந்த படத்தில் நவாஸுத்தீன் சித்திக்கி, ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சல்மான் கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

காமெடி

காமெடி

ஃப்ரீக்கி அலி படத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். படத்தில் அந்த அளவுக்கு காமெடி சூப்பராக வந்துள்ளது. இது ஒரு வித்தியாசமான படமாக அமைந்துள்ளது.

திருமணம்

திருமணம்

சல்மானிடம் திருமணம் மற்றும் செக்ஸ் பற்றி கேட்டதற்கு அவர் கூறுகையில், நான் ஏற்கனவே இதற்கு பதில் அளித்துள்ளேன். எனக்கு திருமணமும் நடக்கவில்லை, அதுவும்(செக்ஸ்) நடக்கவில்லை என்றார்.

சல்மான்

சல்மான்

முன்னதாக கரண் ஜோஹரின் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான் கூறியதாவது, நான் இன்னும் கன்னி கழியாமல் உள்ளேன். என் வருங்கால மனைவிக்காக கற்பை பாதுகாத்து வைத்துள்ளேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சல்மான் பாய்ஸ்

சல்மான் பாய்ஸ்

சல்மான் கானின் மூத்த தம்பி அர்பாஸ் கான் தபாங் 2 படம் மூலம் இயக்குனர் ஆனார். இதையடுத்து தற்போது சொஹைல் கானும் இயக்குனர் ஆகியுள்ளார். அண்ணன் நடிக்க தம்பிகள் இயக்குகிறார்கள்.

English summary
Sultan of Bollywood Salman Khan said that marriage and sex haven't happened in his life.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil