என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதே நஸ்ரியா செய்யும் பெரிய தியாகம்தான்! - பஹத் பாஸில்

By Shankar

கொச்சி: என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது எந்த ஒரு பெண்ணுக்கும் ரொம்ப கஷ்டமான விஷயம்தான். அந்த வகையில் எனக்காக பெரிய தியாகம் பண்ணுகிறார் நஸ்ரியா என அவரை திருமணம் செய்யவிருக்கும் நடிகர் பகத் பாஸில் தெரிவித்துள்ளார்.

பாஸில் மகன்

பாஸில் மகன்

இயக்குநர் பாஸிலின் மகன் நடிகர் ஃபஹத்துக்கும் நஸ்ரியாவுக்கும் நிக்காஹ் நிச்சயிக்கப்பட்டிருப்பதுதான் தற்போது தமிழ், மலையாளம் என இரு திரையுலகிலும் பரபரப்பான செய்தியாக பேசப்படுகிறது.

ரொம்ப கஷ்டம்

ரொம்ப கஷ்டம்

இந்நிலையில் என்னை மணப்பது மிகவும் அபாயம் என்று நடிகர் ஃபஹத் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளது, மேலும் பரபரப்பு கிளப்பியுள்ளது.

உண்மைதான்

உண்மைதான்

நஸ்ரியாவுடனான நிக்காஹ் குறித்து நடிகர் ஃபஹத் கூறுகையில், "ஆம்... எனக்கும் நஸ்ரியாவிற்கும் நிச்சயம் நடந்திருப்பது உண்மைதான். என்னை மணப்பது மிகவும் அபாயமானது. ஏனென்றால் என்னை மணப்பது ஒரு பெண் அவளது வாழ்க்கையையே தியாகம் செய்வதற்குச் சமம். நஸ்ரியா அந்தத் தியாகத்துக்கு தயாராக உள்ளார்.

பிடிச்சுப் போச்சு

பிடிச்சுப் போச்சு

நஸ்ரியாவை என் குடும்பத்திற்கு மிகவும் பிடித்துவிட்டது. நஸ்ரியாவுடன் பேசத் துவங்கியதும் நானும் காதலில் விழுந்துவிட்டேன். இதில் எனக்கே ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், நான் சம்பிரதாயமான நிக்காஹ்விற்கு ஒப்புக்கொண்டது தான்.

என்னை மாற்றிவிட்டாள்!

என்னை மாற்றிவிட்டாள்!

சத்தியமாக சொல்கிறேன் இந்த பெண் (நஸ்ரியா) என்னை மாற்றிவிட்டாள். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. நான் நஸ்ரியாவை கடைசி வரை நல்லமுறையில் பார்த்துக்கொள்வேன் என உறுதியளிக்கிறேன்," என்று பதிவு செய்திருக்கிறார்.

ஆன்ட்ரியா விவகாரம்...

ஆன்ட்ரியா விவகாரம்...

பஹத் பாஸில் இப்படிச் சொல்ல காரணமிருக்கிறது. நிஜத்தில் அவர் கொஞ்சம் ப்ளேபாய் டைப். சில மாதங்களுக்கு முன் நானும் ஆன்ட்ரியாவும் காதலிக்கிறோம், கல்யாணமும் பண்ணிக்குவோம், என்று அவர் கூறியிருந்தார். ஆனால் அதை மறுத்த ஆன்ட்ரியா, இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லே. அவர் லூஸ் டாக் விட்டுட்டார் என திட்டியது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X