கிளாஸ், கிளாசிக், அருமை: செக்கச் சிவந்த வானத்தை கொண்டாடும் மகேஷ் பாபு
ஹைதராபாத்: செக்கச் சிவந்த வானம் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார் நடிகர் மகேஷ் பாபு.
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு இயக்குனர் மணிரத்னத்தின் தீவிர ரசிகர். இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தை பார்த்துள்ளார் மகேஷ் பாபு.
படத்தை பார்த்த அவர் ட்விட்டரில் அதை பாராட்டித் தள்ளியுள்ளார்.
மகேஷ் பாபு
அருமையான நடிப்பு...ஏ.ஆர். ரஹ்மான் ....இணையில்லை, சந்தோஷ் சிவன்---கிளாஸ். மணிரத்னம் ரசிகனாக சென்னையில் உள்ள தியேட்டர்களில் அவரின் படங்களை பார்த்து கை தட்டுவது உண்டு. இன்று என் வீட்டு தியேட்டரில் பார்த்துவிட்டு கை தட்டினேன் என்று மகேஷ் பாபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தியேட்டர்
படத்தை பார்த்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை பார்க்காதவர்களை பார்க்குமாறு வலியுறுத்தியுள்ளார் மகேஷ். மாஸ்டர் இஸ் பேக் என்று பெருமிதம் கொண்டுள்ளார்.
படம்
ஒரு வாரத்திற்கு முன்பு ரிலீஸான படத்தை எப்படி ஹோம் தியேட்டரில் பார்த்தீர்கள். உங்களை போன்ற சூப்பர் ஸ்டாருக்கு இது நல்லது இல்லை..எப்படி வீட்டில் பார்த்தீர்கள்...திருட்டு டிவிடி தானே? பிரபலங்களே இப்படி செய்தால் சினிமா எப்படி வளரும் என்று விஜய் ரசிகர் ஒருவர் மகேஷ் பாபுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிம்பு
செக்கச் சிவந்த வானம் படம் ரிலீஸானதில் இருந்து சிம்பு ரசிகர்களை கையிலேயே பிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











