குட்டி பவானி ஹீரோவாக நடிக்கும் புதிய படம்... பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

சென்னை : முன்னணி நடிகர்களுடன் மாஸ்டராக பல படங்களில் நடித்துள்ளவர் மாஸ்டர் மகேந்திரன்.

Recommended Video

அவர் மட்டும் இல்லைன்னா என் நெலம | ACTOR MAHENDRAN CHAT PART-02 | FILMIBEAT TAMIL

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் குட்டி பவானியாக சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தார்.

இதையடுத்து இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தேர்ந்தெடுத்த கதைகளில் இவர் நடித்து வருகிறார்.

நடிகர் மாஸ்டர் மகேந்திரன்

நடிகர் மாஸ்டர் மகேந்திரன்

நடிகர் மாஸ்டர் மகேந்திரன் சிறுவயது முதலே பல படங்களில் நடித்துள்ளார். நாட்டாமை படத்தில் இவரை கேஎஸ் ரவிக்குமார் அறிமுகப்படுத்தினார். சிறு குழந்தையாக பஞ்சாயத்தில் பெரிய விஷயத்திற்கு சாட்சியாக இவர் இருப்பார். அந்த வயதிலேயே இவரது நடிப்பு பலரால் பாராட்டுக்கு உள்ளானது.

குழந்தை நட்சத்திரம்

குழந்தை நட்சத்திரம்

தொடர்ந்து தாய்க்குலமே தாய்க்குலமே, கும்பகோணம் கோபாலு உள்ளிட்ட படங்களில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தமிழ்நாடு மாநில விருதை இவர் வென்றுள்ளார். தொடர்ந்து தெலுங்கிலும் தேவி, லிட்டில் ஹார்ட்ஸ் போன்ற படங்களுக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான நந்தி விருதையும் வென்றுள்ளார்.

விழா படத்தில் கதாநாயகன்

விழா படத்தில் கதாநாயகன்

தொடர்ந்து படையப்பா, மின்சார கண்ணா, நீ வருவாய் என போன்ற பல தமிழ் படங்களில் நடித்தவர், பாரதி பாலகுமாரன் இயக்கத்தில் கடந்த 2013ல் வெளியான விழா திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியாக நடித்து வரவேற்பை பெற்றார்.

மிரட்டலான குட்டி பவானி கேரக்டர்

மிரட்டலான குட்டி பவானி கேரக்டர்

குட்டி பவானி என்ற கேரக்டரில் இவர் நடித்திருந்த கதாபாத்திரம் மிரட்டலாக அமைந்தது. இதையடுத்து இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆயினும் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார்.

அர்த்தம் படத்தில் ஹீரோ

அர்த்தம் படத்தில் ஹீரோ

தற்போது மணிகாந்த் தலக்குட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள அர்த்தம் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதில் ஷ்ரத்தா தாஸ் நாயகியாக நடித்துள்ளார். த்ரில்லர் படமாக அமைந்துள்ள இந்தப் படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

பர்ஸ்ட் லுக் வெளியீடு

பர்ஸ்ட் லுக் வெளியீடு

இந்நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதை மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மிரட்டலான வகையில் மோஷன் போஸ்டராக இது வெளியாகியுள்ளது. இதனிடையே, படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும் விரைவில் படம் ரிலீசாக உள்ளதாகவும் படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மிரட்டலான மோஷன் போஸ்டர்

மிரட்டலான மோஷன் போஸ்டர்

ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையில் படத்தின் மோஷன் போஸ்டர் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. மிகவும் த்ரில்லிங்காக அமைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமாக காணப்படுகிறது. இதில் மகேந்திரன் மற்றும் ஷ்ரத்தாவும் காணப்படுகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X