twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குட்டி பவானி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் மிரட்டலான டைட்டில் போஸ்டர் வெளியானது!

    |

    சென்னை : குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்த மாஸ்டர் மகேந்திரன் விழா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

    பல படங்களில் நடித்தும் உழைப்புக்கு தகுந்த சரியான அங்கீகாரம் இல்லாமல் போராடிக்கொண்டிருந்த இவருக்கு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய பெயரை பெற்று தந்துள்ளது.

    இத்தனை மொழிகளிலா?... லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் புதிய அப்டேட் !இத்தனை மொழிகளிலா?... லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் புதிய அப்டேட் !

    மாஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக ஒப்பந்தம் ஆகி வரும் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ளது.

    சினிமாவில் கதாநாயகனாக

    சினிமாவில் கதாநாயகனாக

    குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பிரபலமாக இருந்தவர்களில் வெகு சிலர் மட்டுமே இன்றளவும் படங்களில் ஜொலித்துக் கொண்டுள்ளனர். இந்த வகையில் 1990களில் அனைவருக்கும் பிடித்த குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகர் மாஸ்டர் மகேந்திரன். குறிப்பாக நாட்டாமை படத்தில் இவர் பேசும் ஒரு சிறிய வசனம் இன்றளவும் பிரபலமாக உள்ளது. பெரும்பாலும் பாண்டியராஜன் இயக்கும் திரைப்படங்களில் மகனாக நடித்து பாராட்டுக்களை பெற்று வந்தார். இந்நிலையில் விழா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக கால் தடத்தை பதித்த மகேந்திரனுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் விடாமல் கதாநாயகனாக நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்த மகேந்திரனுக்கு கதாநாயகனாக இதுவரை எந்த ஒரு சரியான அங்கீகாரமும் கிடைக்கவில்லை. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்த இவருக்கு மிகப்பெரிய நற்பெயர் கிடைத்தது. விஜய்,விஜய் சேதுபதி ,மாளவிகா மோகனன் அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ் என பிரம்மாண்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்த இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

    சிறு வயது பவானி

    சிறு வயது பவானி

    ஹீரோ மற்றும் வில்லன் என இருவருக்கும் சரிசமமான கதாபாத்திரங்கள் மற்றும் மாஸ் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்த மாஸ்டர் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இதில் விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் துளிக்கூட நல்லவன் இல்லாத கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இதில் விஜய்சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் மஸ்டர் மகேந்திரன் நடித்து மிரட்டியிருப்பார். விஜய் சேதுபதியின் மேனரிசங்கள் எப்படி இருக்குமோ அதேபோல சிறு வயது பவானி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மகேந்திரன். இந்த கதாபாத்திரம் படத்தின் ஆரம்பத்திலேயே தொடங்க சில நிமிடங்கள் மட்டுமே மகேந்திரன் தோன்றும் வாய்ப்பு கிடைக்க அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு இத்தனை நாள் காத்திருந்த தருணத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

    போராடிக் கொண்டுள்ளார்

    போராடிக் கொண்டுள்ளார்

    இதுவரை படங்களில் காதல் நாயகனாக வலம் வந்த மகேந்திரன் இந்த படத்தில் முரட்டுத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் அசர வைத்தார். இவரின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவிக்க நம்பிக்கையுடன் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக பெயர் புகழோடு வலம் வந்த மாஸ்டர் மகேந்திரன் இன்று வரை தமிழ் சினிமாவில் ஹீரோவாக தனி இடத்தை பிடிக்க போராடி கொண்டுள்ளார். எந்த திரை பின்புலமும் இல்லாமல் சினிமாவில் வலம் வரும் இவர் அடுத்தடுத்து படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார். மாஸ்டர் படத்திற்கு பிறகு நல்ல நல்ல கதைகள் இவரைத் தேடி வர தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் சிதம்பரம் ரயில்வே கேட் மற்றும் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு போன்ற படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். இரண்டு திரைப்படங்களும் கிராமத்து கதை களத்தில் உருவாகி வருகிறது.

    அர்த்தம்

    அர்த்தம்

    இந்த நிலையில் மகேந்திரன் அடுத்ததாக நடிக்கும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு "அர்த்தம்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் மிக வித்தியாசமாக அர்த்தம் டைட்டில் சங்கிலியால் கட்டப்பட்டு இருக்கிறது. தூக்கு கயிறுக்கு நடுவே 6 என்ற எண்ணும் எழுதப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு மாஸ்டர் மகேந்திரனின் அர்த்தம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தைப் பெற்றுள்ளது . மேலும் இவருடன் இணைந்து நடிகை ஷ்ரத்தா தாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

     ஷ்ரத்தா தாஸ்

    ஷ்ரத்தா தாஸ்

    ஷ்ரத்தா தாஸ் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்ததையடுத்து "அர்த்தம்" திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் . இந்தப் படத்தை இயக்குனர் மணிகண்டன் தலகுட்டி என்பவர் இயக்குகிறார். மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தை ராதிகா ஸ்ரீநிவாஸ் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் இப்படம் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் படத்திற்கு இசையமைக்கிறார் , பவன் சென்னா ஒளிப்பதிவு செய்கிறார். விவேக், முத்தமிழ்,ராகேன்டு மௌலி பாடல்கள் எழுதுகின்றனர். மாணிக்காந்த் படத்தொகுப்பு செய்கிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

    English summary
    Master Mahendran is getting ready for the new movie as a hero. The first look of the movie has been released on Independence day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X