வேற லெவல் பவானி...இந்த அன்சீன் போட்டோஸ் லோகேஷ் கனகராஜ் கூட வெளியிடலியே
சென்னை : மாஸ்டர் ஷுட்டிங் ஸ்பாட்டில் நடந்த இதுவரை வெளி வராத போட்டோக்களை, அந்த படத்தில் சிறு வயது பவானி கேரக்டரில் நடத்த மாஸ்டர் மகேந்திரன் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட மூன்றே போட்டோக்களுக்கு 3000 க்கும் அதிகமானவர்கள் கமெண்ட் செய்து இதை டிரெண்டிங்கும் ஆக்கி உள்ளார்கள் விஜய் ரசிகர்கள்.
விஜய் நடித்த பிளாக் பஸ்டர் படமான மாஸ்டர் படம் 2019 ம் ஆண்டே துவங்கப்பட்டது. 2020 ம் ஆண்டு இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் ஷுட்டிங் தள்ளிப்போனது. இதனால் 2021 ம் ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்தனர். தியேட்டர்களில் 50 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே துணிந்த படத்தை ரிலீஸ் செய்து பிளாக்பஸ்டர் படமாக்கினர்.

விஜய்யுடன் மாஸ்டர் மகேந்திரன்
இந்த படத்தில் விஜய் காலேஜ் ப்ரொஃபசராக நடித்திருந்தார். வில்லனான விஜய் சேதுபதியின் சிறு வயது பவானி கேரக்டரில் மாஸ்டர் மகேந்திரன் நடித்திருந்தார். இவர் சரத்குமார் நடித்த நாட்டாமை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். விஜய் நடித்த மின்சார கண்ணா உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர். தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

ஒரே நாளில் 3 படங்கள்
மாஸ்டர் படத்தில் இவர் நடித்த ரோல் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இந்நிலையில் மாஸ்டர் மகேந்திரன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு, இவர் ஹீரோவாக நடிக்க உள்ள ரிப்பபெர்ரி, கரா, அமிகோ காரேஜ் ஆகிய படங்களின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டன. ஆனால் இந்த போட்டோக்களை விட மகேந்திரன் வெளியிட்ட போட்டோக்கள் தான் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டன.

அட இது புதுசா இருக்கே
மாஸ்டர் பட ஷுட்டிங்கின் போது ஷுட்டிங் ஸ்பாட்டில் தனது பிறந்தநாளை கேக் வெட்டிய போட்டோக்களை தான் மகேந்திரன் பகிர்ந்திருந்தார். அதில் விஜய், மகேந்திரனை கட்டிபிடித்து வாழ்த்து சொல்வது, இருவரும் மாறி மாறி கேக் ஊட்டி விடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த போட்டோக்களை தனது இந்த வருட பிறந்தநாளன்று வெளியிட்டு, தனது மகிழ்ச்சியையும் அன்பையும் தெரிவித்திருந்தார். மகேந்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னவர்களை விட இந்த போட்டோக்களை பாராட்டியவர்கள் தான் அதிகம்.
Recommended Video

மாஸ்டர் அன்சீன் போட்டோஸ்
விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல விஜய்யின் மகன் சஞ்சய்யும் இந்த போட்டோக்களை வெளியிட்டு, மாஸ்டர் படத்தின் அன்சீன் போட்டோஸ் என குறிப்பிட்டிருந்தார். இதுவரை வெளிவராத இந்த போட்டோக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. இதனை மகேந்திரன் வெளியிட்டதுமே விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #ThalapathyVijay என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி, டிரெண்டிங் ஆக்கினர்.


Click it and Unblock the Notifications











