சச்சின் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?.. கலைப்புலி எஸ். தாணு சொன்ன சூப்பர் மேட்டர்!
சென்னை: சூர்யாவை வைத்து அடுத்ததாக வாடிவாசல் படத்தை தயாரிக்க காத்துக் கொண்டிருக்கும் கலைப்புலி எஸ். தாணு இந்த வாரம் கிச்சா சுதீப்பை வைத்து தயாரித்த மேக்ஸ் படத்தின் மூலம் வசூல் வேட்டையை நடத்தி வருகிறார். இந்த ஆண்டு கன்னட சினிமாவில் வெளியான பல படங்கள் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.
கடந்த வாரம் உபேந்திரா நடிப்பில் வெளியான UI திரைப்படத்துக்கு கன்னட ரசிகர்கள் ஆதரவு கொடுத்தாலும் மற்ற இடங்களில் அந்த படம் பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில், இந்த வாரம் கிச்சா சுதீப் நடிப்பில் வெளியாகி உள்ள மேக்ஸ் படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழில் நேற்று வெளியான மேக்ஸ் திரைப்படம் இங்கேயும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் படம் போல இருப்பதாக விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், அந்த படத்துக்கான ஹைப் எகிறியிருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கலைப்புலி எஸ். தாணு மேக்ஸ் படம் குறித்தும் வாடிவாசல் குறித்தும் விஜய்யின் சச்சின் குறித்தும் பேசியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வசூல் வேட்டை நடத்தும் மேக்ஸ்: கிச்சா சுதீப் தொடர்ந்து பான் இந்தியா படைப்புகளை கொடுத்து வருகிறார். விக்ராந்த் ரோணா அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், மேக்ஸ் திரைப்படம் மேக்ஸிமம் வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான மார்கோ திரைப்படம் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக மேக்ஸ் அமைந்துள்ளதாக கூறுகின்றனர். விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப், வரலட்சுமி சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் முதல் நாளே 10 கோடி வசூல் வேட்டை நடத்திய நிலையில், ஒட்டுமொத்தமாக இதுவரை 18 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாடிவாசல் வருது: லண்டனில் வாடிவாசல் படத்துக்கான அனிமேட்ரானிக்ஸ் வேலைகள் முழுமையடைந்து விட்டது. வெற்றிமாறன் விடுதலை 2 படத்தை முடித்துவிட்ட நிலையில், சூர்யா ஆர்ஜே பாலாஜி படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் படத்தில் நடிக்க வந்துவிடுவார் என உறுதியாக அப்டேட் கொடுத்துள்ளார் கலைப்புலி எஸ். தாணு.

சச்சின் ரீ ரிலீஸ்: கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய்யின் கில்லி ரீ ரிலீஸ் செய்யப்பட்டு செம கலெக்ஷன் அள்ளிய நிலையில், 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சச்சின் படத்தை ரீ ரிலீஸ் செய்யப்போவதாக கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார். ஏகப்பட்ட இளைஞர்களை கவர்ந்த சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸில் நிச்சயம் பந்தயம் அடிக்கும் என்கிறார்.
சச்சின் படத்தில் விஜய்க்கு பதிலாக: சச்சின் படத்தில் விஜய்க்கு பதிலாக முதலில் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் தான் நடிக்க வேண்டியது. ஆனால், சில பல காரணங்களுக்காக அவரது கால்ஷீட் கிடைக்காத நிலையில், விஜய் அந்த படத்தில் கமிட்டாகி நடித்து படத்தை வேறலெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றுவிட்டார் என கலைப்புலி எஸ். தாணு கூறியுள்ளார். மேக்ஸ் திரைப்படம் வெள்ளிக்கிழமையான நேற்று தமிழ்நாட்டில் வெளியாகி இருக்கும் நிலையில், இந்த வாரம் வசூலை அள்ளும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











