தொடர் தோல்வி.. அது மட்டும் இல்லைன்னா நானே படம் பண்ணிடுவேன்.. ஷாருக்கானின் அதிரடி மாற்றம்!

மும்பை: ஜீரோ படத்தின் படுதோல்வியைத் தொடர்ந்து கடும் அப்செட்டில், கடந்த ஒரு ஆண்டாக எந்தவொரு படத்திலும் நடிகர் ஷாருக்கான் கமீட் ஆகவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், இயக்குநர் ஆவது குறித்து பேசியுள்ளார்.

அந்த பேட்டியில், கிறிஸ்டோபர் நோலன் போல இயக்குநராக வேண்டும் என்று ஷாருக்கான் ஆசைப்பட்டதாகவும், ஆனால், அந்த ஒரு விஷயம் தன்னை தடுப்பதாகவும் கூறியுள்ளார்.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

பாலிவுட்டின் கான் நடிகர்கள் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். அதிலும் பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக் கான், தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்து வருகிறார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

ஷாருக்கான் ஹீரோ மற்றும் ரசிகன் என இரு வேடங்களில் நடித்த ஃபேன் படத்தை பெரிதும் எதிர்பார்த்தார் ஆனால், அந்த படம் ரிலீசாகி படு தோல்வியை சந்தித்து மிகப்பெரிய ஏமாற்றத்தை அவருக்கு அளித்தது. அடுத்ததாக கடந்த ஆண்டு வெளியான ஜீரோ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டு இருந்த ஷாருக்கானுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றம் கிடைக்க புதிய படங்களில் ஒப்பந்தம் ஆவதை ஓராண்டாக நிறுத்தி வைத்துள்ளார்.

அட்லி

அட்லி

இதற்கிடையே தெறி, மெர்சல், பிகில் என விஜய் படங்களை இயக்கிய அட்லியின் இயக்கத்தில் ஷாருக்கான் சங்கி எனும் படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் மிகப்பெரிய அளவில் பரவின. ஆனால், அது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இது வரை வெளியாகவில்லை. அதற்கடுத்து ஷாருக்கான் மற்ற பாலிவுட் இயக்குநர்கள் படங்களில் நடிக்கப் போகிறார் என்ற தகவல்களும் பரவ தொடங்கியுள்ளன.

கிறிஸ்டோபர் நோலன்

கிறிஸ்டோபர் நோலன்

ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் படங்கள் என்றால் ஷாருக்கானுக்கு மிகவும் பிடிக்குமாம். அவரை போல ஒரு இயக்குநராக வரவேண்டும் என்று சில நேரங்களில் ஷாருக்கான் சிந்தித்துள்ளாராம். ஆனால், சில விஷயங்களால் ஷாருக்கானால் இயக்குநர் அவதாரம் எடுக்க தயங்கி வருகிறாராம்.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

நடிகராக இருக்கும் போது, தான் மிகவும் சந்தோஷமாக உள்ளதாகவும், இயக்குநராக மாறிவிட்டால், சந்தோஷங்கள் மறைந்து சோகத்தில் மூழ்கிவிடுவேன் என்ற பயம் தான் தன்னை இயக்குநராக மாறவிடாமல் தடுப்பதாக அந்த பேட்டியில் ஷாருக்கான் கூறியுள்ளார்.

ஓகே சொல்லத் தெரியாது

ஓகே சொல்லத் தெரியாது

அதிலும், ஒரு காட்சியை படமெடுத்து முடித்து விட்டு, இந்த ஷாடு கச்சிதமாக வந்துள்ளது ஓகே என சொல்ல தனக்கு மனசு வராது என்றும், இன்னும் பெட்டராக காட்சிகளை படமாக்க வேண்டும் என்று எண்ணும் எண்ணம் இருப்பதால், நிச்சயம் தன்னால் இயக்குநராக மாற முடியாது என ஷாருக்கான் கூறியுள்ளார். ஷாருக்கானுக்குள்ளும் இப்படி ஒரு இயக்குநர் ஆசை தூங்கிக் கிடப்பதை அறிந்து பாலிவுட் திரையுலகம் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X