'மீ டூ': என்ன மோகன்லால் இப்படி சொல்லிட்டாரே?

By Siva

Recommended Video

சோகத்தில் அஜீத் ரசிகர்கள் | மீடு பற்றி மோகன்லால்- வீடியோ

துபாய்: மீ டூ இயக்கம் ஃபேஷனாகிவிட்டது என்று நடிகர் மோகன்லால் தெரிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தாவின் துணிச்சலை பார்த்துவிட்டு திரையுலக பிரபலங்கள், பிற துறைகளை சேர்ந்தவர்கள் என்று பல பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து தெரிவித்துள்ளனர். இதனால் மீ டூ இயக்கம் வேகம் எடுத்தது.

இந்நிலையில் இது குறித்து மலையாள நடிகர் மோகன்லால் துபாயில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

பிரச்சனை

பிரச்சனை

மலையாள திரையுலகில் எந்த பெரிய பிரச்சனையும் இல்லை. மீ டூவை ஒரு இயக்கமாக பார்க்கக் கூடாது. அது வந்த வேகத்தில் மறைந்துவிடும். மீ டூ என்பது தற்போது ஃபேஷனாகிவிட்டது. இது போன்ற விஷயங்களின் ஆயுட்காலம் மிக மிக குறைவு. பாலியல் தொல்லை படங்களில் மட்டும் அல்ல எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

மீ டூ

மீ டூ

மீ டூ இயக்கம் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. அதனால் அது குறித்து பேச முடியாது என்று மோகன்லால் தெரிவித்தார். மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் தலைவரான மோகன்லால் இப்படி பேசியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மலையாள திரையுலகில் என்ன பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் மோகன்லால்.

மோகன்லாலா?

மோகன்லாலா?

மீ டூ என்பது பிறரை பழிவாங்கத் துவங்கிய இயக்கம், அது ஃபேஷனாகிவிட்டது. வளர்ந்து வரும் நடிகைகள் பெரிய நடிகர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து விளம்பரம் தேடுகிறார்கள் என்று சில சீனியர் நடிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மோகன்லால் மீ டூ பற்றி இப்படி பேசிவிட்டாரே என்று ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பயம்

பயம்

மீ டூ என்று தைரியமாக பேசியவர்களின் கெரியர் நாசமாகிக் கொண்டிருக்கிறது. இதை பார்த்த பிறகும் எப்படி மற்றவர்கள் துணிந்து வந்து தங்களுக்கு நடந்தது பற்றி தெரிவிப்பார்களா?. சம்பவம் நடந்த உடனே அதை வெளியே சொல்லாமல் இருந்ததற்கு இந்த பயம் தான் காரணம் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X