நானும் விஜய்யும் நல்ல நண்பர்கள்தான்! - சூர்யா
நானும் விஜய்யும் நல்ல நண்பர்களாகத்தான் இருக்கிறோம். சினிமா பற்றி அவ்வப்போது பேசிக் கொள்வோம், என்று சூர்யா கூறியுள்ளார்.
இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களில் பெரிய ஹீரோக்கள் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், தமிழில் அப்படி இல்லை. பல நடிகர்கள் பேசிக் கொள்வதுகூட இல்லை. ரஜினி, கமல்தான் இதில் விதிவிலக்கு.

விஜய் - சூர்யா
விஜய்யும், சூர்யாவும் ‘நேருக்கு நேர்' மற்றும் ‘பிரண்ட்ஸ்' படங்களில் இணைந்து நடித்தார்கள். தற்போது இருவருமே முதல் நிலை நடிகர்களாகிவிட்டார்கள். இருவருக்குமே பெரிய ரசிகர் வட்டம் உள்ளது.

பெரியண்ணா
சூர்யா - விஜயகாந்தை வைத்து பெரியண்ணா என்ற படத்தையும் இயக்கியுள்ளார் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன்.
சமீபத்தில் கேரளா சென்றிருந்த சூர்யாவிடம், இருவருக்குமான நட்பு குறித்து கேட்கப்பட்டது.

நண்பர் விஜய்
அதற்கு பதிலளித்த சூர்யா, "விஜய் என்னுடைய நல்ல நண்பர்தான். கல்லூரி காலத்தில் இருந்தே அவருடனான என் நட்பு தொடர்கிறது.
பொதுவாக ஒருவருக்கொருவர் பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம்.
என் படங்கள் மற்றும் டிரெய்லர்கள் வெளியாகும் போதெல்லாம் அதைப் பார்த்து பாராட்டி மெஸேஜ் அனுப்புவார் விஜய். நானும் அப்படித்தான்.

சேர்ந்து நடிப்பீர்களா?
அவ்வப்போது போனில் தொடர்பு கொண்டு சினிமா பற்றிப் பேசுவோம். குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறோம்," என்றார்.
ஆனால் மீண்டும் சேர்ந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, 'தெரியவில்லை' என்று பதிலளித்தார் சூர்யா.


Click it and Unblock the Notifications











