ஜீவனிடம் 'சிக்கிய' மீரா ஜாஸ்மின்

முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர வேண்டும் என்பது ஜீவனின் ஆசை. நான் அவனில்லை படத்தில் ஒரே நேரத்தில் ஐந்து நாயகிகளுடன் ஜோடி சேர்ந்து அசத்தினார். சினேகா, நமீதா, கீர்த்தி சாவ்லா, ஜோதிர்மயி, தேஜாஸ்ரீ என அப்படத்தில் ஜோடி போட்ட ஜீவனுக்கு, மீரா ஜாஸ்மினுடன் எப்படியாவது ஒரு படத்தில் ஜோடி போட்டு விட வேண்டும் என்ற தீராத ஆசை இருந்து வந்தது.
தான் புக் ஆகும் படங்களின் தயாரிப்பாளர்களிடம் இந்த ஆசையை அவர் தெரவித்து வந்தார். ஆனால் அந்த ஆசை இப்போதுதான் நிறைவேறியுள்ளது. அவர் நாயகனாக நடிக்கும் பயணிகள் கவனத்திற்கு படத்தில் மீரா ஜாஸ்மின் ஜோடி சேரவுள்ளார்.
நல்ல திறமையான நடிகையான மீரா ஜாஸ்மினுடன் ஜோடி போடுவதால், படு சந்தோஷமாக இருக்கிறார் ஜீவன்.
எஸ்.ஏ.விஜய்குமார் இப்படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு படு வேகமாக போய்க் கொண்டிருக்கிறது.
Comments


Click it and Unblock the Notifications