விஜய்யிடம் கற்றுக்கொண்டது இதைத்தான்.. தளபதி பற்றி வெள்ளி விழா நாயகன் மோகன் நச் ஸ்பீச்

சென்னை: விஜய் இப்போது GOAT படத்தில் நடித்துமுடித்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் அந்தப் படம் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அடுத்ததாக அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படம்தான் தனது கடைசி படம் என்று விஜய் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் அவர் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் களமாட இருக்கிறார்.

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய்தான் இப்போது அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோக்களில் ஒருவர். குறிப்பாக ரஜினியின் இடத்தை அவர் பிடிப்பதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இருப்பதாக திரை ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதன் காரணமாகத்தான் விஜய்க்கு எவ்வளவு கோடி வேண்டுமானாலும் சம்பளத்தை கொட்டி கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கின்றனர்.

Vijay Mohan GOAT

ஏஸ்.ஏ.சி துணை: இப்படி விஜய்யின் கோட்டை பலமாக இப்போது இருந்தாலும் அதற்கான ஒவ்வொரு செங்கல்லையும் வைக்க ஆரம்பித்தவர் அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய்க்காக கதை கேட்பது, சிறந்த கதைகள் வைத்திருக்கும் இயக்குநர்களை விஜய் பக்கம் மடைமாற்றுவது என சந்திரசேகர் செய்த விஷயங்கள் ஏராளம். அவரது பக்கபலம் இருந்ததால்தான் எந்த வித சிக்கலும் இல்லாமல் சினிமாவில் விஜய்யால் நிலைக்க முடிந்தது என்று ஒருசிலர் கூறுவதுண்டு.

அசிங்கப்பட்ட விஜய்: நடிகராக உள்ளே நுழைந்து தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய்க்கு ஆரம்பத்தில் ஏகப்பட்ட சோதனைகள் வந்தன. இவரது முதல் படமான நாளைய தீர்ப்பு வெளிவந்த பிறகு விஜய்யை உருவ கேலி செய்து ஒரு பத்திரிகை எழுதியது. இதுபோல் பல விமர்சனங்களையும், அசிங்கங்களையும் விஜய் சந்தித்திருக்கிறார். ஆனால் அவை எவற்றையுமே தடைக்கல்லாக பார்க்காமல் படிக்கல்லாக பார்த்து தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருந்தார்.

தமிழக வெற்றிக் கழகம்: விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். GOAT படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; அடுத்ததாக ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்த உள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். விஜய்யின் கடைசி படத்தை ஹெச்.வினோத் இயக்கவிருக்கிறார்.

வரவேற்பை பெற்ற ட்ரெய்லர்: படமானது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. கடந்த 17ஆம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ட்ரெய்லரில் விஜய்யின் நடிப்பையும், மேனரிசத்தையும் அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்திருக்கின்றனர். குறிப்பாக ட்ரெய்லரின் கடைசியில் மருதமலை மாமணியே பாடலை விஜய் பாடும்போது படு க்யூட்டாக இருந்தது என்றும் தெரிவித்தார்கள் ரசிகர்கள். இந்தச் சூழலில் கோட் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் மோகன் விஜய் பற்றி பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.

கற்றுக்கொண்டது இதைத்தான்: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய மோகன், "விஜய்யிடம் நான் கற்றுக்கொண்டது அவரது அமைதியைத்தான். ஷூட்டிங்கில் ஷாட்டின் இடைவெளியில் யாரிடமும் எதுவும் பேசமாட்டார். ஃபோன் நோண்டுவதோ, பத்து பேருடன் ஜாலியாக சுற்றுவதோ அவரிடம் இருக்காது. அனைவரையும் கவனித்துக்கொண்டே இருப்பார். அவர் மிகச்சிறந்த கவனிப்பாளர். உங்களிடமிருந்து அமைதியை நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவரிடமே சொல்லியிருக்கிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X