விஜயகாந்த்திடம் இருந்தது நம்மில் யாருக்குமே இல்லை.. ஓபனாக பேசிய மைக் மோகன்
சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த வருடம்டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியது. அவர் இருந்தவரை எத்தனையோ பேர் அவரால் பயன் அடைந்திருக்கின்றனர். சாமானியர்கள் முதல் பிரபலங்கள்வரை அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். இந்தச் சூழலில் விஜயகாந்த்துடன் நூறாவது நாள் படத்தில் இணைந்து நடித்த மோகன் விஜயகாந்த் குறித்து பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
விஜயகாந்த் இந்தப் பெயரை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. சினிமாவில் நுழைந்து தனக்கான தனித்த உடல் மொழி, ஸ்டைல், வசன உச்சரிப்பு, நடிப்பு என அனைத்திலும் முத்திரை பதித்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் பீக்கில் இருந்தபோது சினிமாவுக்குள் நுழைந்து தனக்கென தனி ரசிகர் படை சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியவர் விஜயகாந்த். அவ்வாறு அவர் அப்படி செய்தது சாதாரண விஷயமில்லை என்பது பலரும் ஒத்துக்கொண்ட உண்மை.

கெத்து கேப்டன்: ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். கேப்டன் என்ற பட்டத்துக்கு உரிய முறையில் பல விஷயங்களை தனியாளாக வழி நடத்தியவர் அவர். சிவாஜியின் இறப்பில் கூட்டத்தை ஒற்றை ஆளாக கட்டுப்படுத்தியது, ஏதேனும் பிரச்னை என்றால் எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் முதல் ஆளாக களத்தில் குதிப்பது, நட்சத்திர கலை விழாவை திறம்பட நடத்தி காண்பித்தது என அவர் உண்மையில் கேப்டன்தான் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்கள்.
உடல்நலக்குறைவு: சினிமாவில் கலக்கிவந்த விஜயகாந்த் அரசியலில் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் அரசியல் தளத்தில் அவருக்கு சில துரோகங்கள் நிகழ்த்தப்பட்டன. அது விஜயகாந்த்துக்கு ரொம்பவே மன உளைச்சலை கொடுத்தது. இதனையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி முழு ஓய்வு பெற்றார். பிறகு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த வருடம் உயிரிழந்தார்.
உதவி: இதற்கிடையே விஜயகாந்த் பலருக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். அவரிடம் உதவி பெற்றவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். அந்த லிஸ்ட்டில் இப்போது டாப் ஹீரோக்களாக இருக்கும் விஜய், சூர்யாகூட இருக்கிறார்கள். இந்தச் சூழலில் விஜயகாந்த் குறித்து மைக் மோகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பல விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார்.
மோகன் பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், “விஜயகாந்த் ஒரு நேர்மையான மனிதர். அப்படிப்பட்டவரை சினிமாவில் பார்ப்பது கஷ்டம். அவ மனதில் என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாகவே பேசுவார். குறிப்பாக அவரது அன்னதானம் பற்றி பேச வேண்டும்.எந்த நேரத்தில் யாருக்கு என்ன செய்கிறார் என்று நேரம் பார்க்காமல் வேலை செய்வார்.
நிர்வாக திறமை: அதேபோல் அவரது நிர்வாக திறமை குறித்தும் சொல்ல வேண்டும். சிவாஜி இறந்தபோது விஜயகாந்த்தின் நிர்வாக திறமையை அனைவருமே பார்த்திருக்கிறோம். நடிகர் சங்க தலைவராக் இருந்த நேரத்திலும் அவரது நிர்வாக திறமை சிறந்த முறையில் இருக்கும். விஜயகாந்த்தை பற்றி இன்னொன்று சொல்ல வேண்டுமென்றால் அவருக்கு இருந்த முரட்டு தைரியம் இப்போது இருக்கும் யாருக்கும் கிடையாது" என்றார்.


Click it and Unblock the Notifications











