அர்பிதா திருமண வரவேற்பில் சல்லு, ஷாருக் டான்ஸ், கட்டிப்பிடி வைத்தியம்: அடடா, அடடா
மும்பை: சல்மான் கானுக்கும் தனக்கும் இடையேயான சண்டையை மீடியா ஊதி பெரிதாக்கிவிட்டதாக ஒரே போடாக போட்டுள்ளார் ஷாருக்கான்.
சல்மான் கானும், ஷாருக்கானும் கடந்த 2 ஆண்டுகளில் 2 முறை கட்டிப்பிடித்துக் கொண்டனர். ஆனாலும் ஆளுக்கொரு பக்கமாகவே செல்கிறார்கள். இந்நிலையில் தான் ஷாருக்கான் சல்மான் கானின் தங்கை அர்பிதாவின் திருமண வரவேற்புக்கு வந்தார். மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
திரும்பும் பக்கம் எல்லாம் திரை நட்சத்திரங்களாக இருந்தார்கள்.

ஷாருக்கான்
திருமண வரவேற்புக்கு வந்த ஷாருக்கானும், சல்மான் கானும் ஒட்டி உறவாடி அன்பாக பழகினர். இதை பார்த்த பல பாலிவுட் பிரபலங்கள் தங்கள் கண்ணில் தான் ஏதோ கோளாறு என்று ஒரு முறை கண்ணை கசக்கிவிட்டு பார்த்தபோது தான் இல்லை இது உண்மை என்பதை உணர்ந்தனர்.

டான்ஸ்
வரவேற்பு நிகழ்ச்சியில் தில் சே அதாங்க உயிரே படத்தில் வைரும் சய்ய, சய்யா பாடலுக்கு ஷாருக்கும், சல்மானும் சேர்ந்து டான்ஸ் ஆடினார்கள்.

மீடியா
சல்மான் கானுக்கும் ஷாருக்கானுக்கும் ஆகுமா ஆகாதா என்று பாலிவுட்காரர்களிடம் கேட்டாலே ஆகாது என்ற பதில் கிடைக்கும். இந்நிலையில் அவர்களுக்கு இடையேயான சண்டையை மீடியாக்கள் தான் ஊதி பெரிதாக்கிவிட்டதாக ஷாருக்கான் தெரிவித்துள்ளார். அது சரி....

ஜாக்குலின்
சல்மான் கானின் லேட்டஸ்ட் இல்லை கொஞ்சம் லேட்டஸ்ட் காதலி என்று கிசுகிசுக்கப்பட்ட ஜாக்குலின் பெர்ணான்ட்ஸ் திருமண வரவேற்புக்கு வந்திருந்தார்.

வஹிதா
வயதானாலும் கம்பீரம் குறையாத பழம்பெரும் இந்தி நடிகை வஹிதா ரஹ்மான்.

லாரா
நடிகை லாரா தத்தா, தனது கணவர் மகேஷ் பூபதியுடன் வந்திருந்தார். ஒரு குழந்தைக்கு அம்மா போன்றே தெரியவில்லையே.

ரித்திக்
40 வயது ஆகிவிட்டாலும் பல கன்னிப் பெண்களின் தூக்கம் கலைக்கும் ரித்திக் ரோஷன்.

எலி அவ்ரம்
சல்மான் கானின் காதலிகள் என்று கூறப்பட்டவர்களில் எலி அவ்ரமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரஜ்
நடிகை ஜியா கானின் தற்கொலைக்கு காரணமானவர் என்று கூறி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த அவரது முன்னாள் காதலர் சூரஜ் பஞ்சோலி.

இம்ரான் கான்
ஆமீர் கானின் மருமகன் இம்ரான் கான் தன் மனைவியுடன் வந்திருந்தார்.

மான்யதா தத்
சல்மானுக்கு மிகவும் நெருக்கமான நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா தனது குழந்தைகளுடன் வந்திருந்தார்.


Click it and Unblock the Notifications











