சூப்பர் ஸ்டாரின் புதிய அவதாரம்- “டெஸ்பைக்கிள் மீ” மினியான் போஸ்டர்கள்

சென்னை: கோலிவுட் சூப்பர் ஸ்டாரின் 64 ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு ரசிகர்கள் பல வகைகளிக் பேஸ்புக் ஸ்டேட்டஸ்களைப் போட்டு தாக்கிவரும் நிலையில் அவரது படங்கள் குறித்த வித்தியாசமான கார்ட்டூன் படங்கள் அனைவரையும் கவர்ந்து வருகின்றது.

ஆங்கிலப்படங்களின் அனிமேஷன் வரிசையில் வெளிவந்த படம் "டெஸ்பைக்கிள் மீ".

அப்படத்தில், வாழைப்பழம் சைஸ்க்கு மினியான்கள் என்ற அனிமேஷன் உருவங்கள் வலம் வரும். அதனைப்போலவே ரஜினியின் படப் பாத்திரங்களை கற்பனையில் கலகலப்பான கார்ட்டூன் போஸ்டர்களாக வெளியிட்டுள்ளனர்.

பாபா தி மாஸ்:

பாபா தி மாஸ்:

முதலில் பாபா திரைப்படம்... ரஜினியைப் போன்ற மினியான் ஒன்று ஜீன்ஸ், சட்டை போட்டு பாபா கதாப்பாத்திரம் போலவே முண்டாசு கட்டியுள்ளது. கழுத்தில் ருத்ராடசம் வேறு. கண்ணில் மினியான் கண்ணாடியுடன் ஸ்டைலாக சிகரெட் பிடிக்கின்றது இந்த மினியான்.

ஹா ஹா எந்திரன்டா:

ஹா ஹா எந்திரன்டா:

ஒரு லாவண்டர் கலர் மினியான் தலைமுடியெல்லாம் புசுபுசுவென்று, கண்ணில் கண்ணாடியுடன், வாயில் பற்களுடன் எந்திரன் ரோபோ ஸ்டைலில் போஸ் கொடுக்கின்றது.

அச்சச்சோ வேட்டியைக் காணோம்:

அச்சச்சோ வேட்டியைக் காணோம்:

ஹா ஹா ஹா.... தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினி வேட்டியைத் தொலைத்து விட்டு வருவாரே அந்த காட்சியை நியாபகப்படுத்தும் வகையில் சட்டையை கால் வரை இழுத்துப் பிடித்துக் கொண்டு கையில் புத்தகத்துடன் நிற்கின்றது இந்த "புரொபசர்" மினியான்.

பாட்சா பாரு பாட்சா பாரு:

பாட்சா பாரு பாட்சா பாரு:

அடுத்தது நம்ம "பாட்சா"... கண்ணில் ஒற்றைக் கண்ணாடியுடன் பாட்சா கோட், சூட்டுடன் ரஜினி மினியான் கையில் ஒரு பயங்கரமான ராட்சத பற்கள் உடைய நாய் மினியானைக் பிடித்துக் கொண்டு காட்சியளிக்கின்றது, மினியானுக்கு ஸ்பெஷலாக தாடி வேறு.

எம்பேரு வடையப்பா சாரி படையப்பா:

எம்பேரு வடையப்பா சாரி படையப்பா:

கிட்டதட்ட வடை சைசே இருக்கும் ரஜினி போன்ற மினியான் ஜிப்பா, பேண்ட் போட்டு ரம்யா கிருஷ்ணனிடம் சவால் விடும் காட்சியில் ரஜினி ஆடுவாரே அதே போல் ஊஞ்சலில் லாலி ஆடுகின்றது இந்த மினியான்.

ப்பாப்பாப்பா படிக்காதவன்:

ப்பாப்பாப்பா படிக்காதவன்:

அடுத்தது நம்ம "படிக்காதவன்" பிலிம் தான்.... ரஜினி ஸ்டைல் மினியான் ஒன்று ஒற்றைக்கண்ணாடியுடன் கார் ஒன்றிற்குள் நுழைந்து நடக்கின்றது காக்கி கலர் உடையுடன்.

எஜமான் காலடி மண்ணெடுத்து:

எஜமான் காலடி மண்ணெடுத்து:

எஜமான் படத்தினை பிரதிபலிக்கும் இந்த மினியான் போஸ்டரில் வேட்டி, சட்டை அணிந்த, ரஜினி முகம் கொண்ட குட்டீயூண்டு மினியான் பட்டாம் பூச்சி பிடித்து விளையாடுகின்றது ஜாலியாய்.

எனக்கு மூணு முகம்:

எனக்கு மூணு முகம்:

ரஜினி மூன்று வேடங்களில் நடித்த படம் மூன்று முகம். அந்த படத்தையும் மினியானில் விட்டு வைக்கவில்லை. ஒற்றைக்கண் கண்ணாடி போட்ட மினியான் ஒன்று ரஜினியின் சாயலில் காக்கி உடுப்பில் கம்பீரமாய் லத்தியுடன் நிற்கின்றது.

ஓம் ராகவேந்திராய நமஹ:

ஓம் ராகவேந்திராய நமஹ:

ரஜினிகாந்த் அவர்கள் நடித்த படங்களிலேயே மிகவும் அற்புதமான படமென்றால் அது ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாறுதான். ராகவேந்திரர்போல் ரஜினி முகத்துடன் காவி உடை அணிந்த, ருத்ராட்ச மாலை போட்ட மினியான் செம பக்திபூர்வமாக, அருமையாக இருக்கின்றது.

சிவாஜி த பாஸ்:

சிவாஜி த பாஸ்:

சி...சி...சிவாஜிதான் இந்த வரிசையில் கடைசி மினியான்... சிவாஜி படத்தில் கடைசியாக வருகின்ற மொட்டை பாஸ் ஸ்டைலில் கோட், சூட் போட்டு பயங்கரமாக போஸ் கொடுக்கின்றது ரஜினி சாயல் மினியான்.

மஞ்சள் கலரு ஜிங்குச்சா:

மஞ்சள் கலரு ஜிங்குச்சா:

இந்த வரிசையில் எல்லா மினியான்களும் அதே வாழைப்பழ சாயலில் மஞ்சள் கலரிலேயே இருப்பது கூடுதல் சிறப்பு.... இந்த பிறந்தநாளை மினியான்களுடன் கொண்டாடுங்கள் ரஜினி சார்..... பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X