சர்கார் கொண்டாட்டத்தில் விஜய் வெட்டிய மிக்சி கிரைண்டர் கேக்

Recommended Video

சர்கார் கொண்டாட்டத்தில் விஜய் வெட்டிய கேக்- வீடியோ

சென்னை: சர்கார் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் விஜய் வெட்டிய கேக்கில் மிக்ஸி கிரைண்டர் இடம்பெற்றது.

என் தலைவனுக்கு எதாவது ஒண்ணுன்னா தமிழ்நாடே பற்றி எரியும் என்று நான்காம் தர தொண்டன் ஒருவன் பாவ்லா காட்டுவதை கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தமிழ் சினிமா காண்பித்து வருகிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது விஜய் ரசிகர்களினால் மியூசிக்கலி, டிக் டாக் போன்ற செயலிகள் பற்றி எரிகின்றன.

Mixie Grinder in Sarkar success cake!

சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவச திட்டங்களுக்கு எதிரான கோஷத்தை ஆதரிக்கும் நோக்கில் விஜய் ரசிகர்கள் வீட்டிலிருக்கும் மிக்சி கிரைண்டர், லேப்டாப், சைக்கிள், டிவி போன்ற பொருட்களை தீயிலிட்டு விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சர்கார் திரைப்படத்தின் வெற்றியை விஜய் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் நீக்கப்பட்டாலும் கேக்கில் நீக்கப்படவில்லை என்பதுதான் முக்கியமான விஷயம். சர்கார் வெற்றிக் கொண்டாட்டக் கேக்கில், மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. விஜய்யுடன் ஏஆர்.முருகதாஸ், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ், ஏஆர்.ரஹ்மான் மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோர் இருக்கும் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Mixie Grinder in Sarkar success cake!

அரசுக்கு எதிராக உள்ள காட்சிகளை நீக்க வேண்டுமென்று பலரும் போர்க்கொடி தூக்கிய பின்னர் சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு மறுதணிக்கை செய்யப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X