பாலய்யானா மாஸ்.. யாருக்குமே கிடைக்காதா கௌரவம்.. மும்பையில் என்ன செய்தார் தெரியுமா?
சென்னை: எந்த நடிகருக்கும் கிடைக்காத ஒரு பெரிய கௌரவம் தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு கிடைத்துள்ளது. அதாவது, மும்பையில் நடைபெற்ற தேசிய பங்குச் சந்தையின் (NSE) தொடக்க விழாவுக்கு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பங்குச் சந்தையின் முக்கிய நிகழ்வை மணி அடித்து தொடங்கி வைத்தார்.
நடிகரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி. ராமராவின் மகனாக நந்தமுரி பாலகிருஷ்ணா. தனது தந்தையைப் போலவே அவரும் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். புராண கதைகள், கிராமத்து கதை, சமூக கருத்து கதைகள், வாழ்க்கை வலாற்று கதை என அனைத்து வகையான திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது பஞ்ச் வசனத்தாலும், அதிரடியான ஆக்ஷன் காட்சிகளில் நடித்து தனக்கு என தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்து இருக்கிறார்.

நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா: பாலைய்யாவிற்கு 65 வயதான போதும் அகண்டா, பகவந்த் கேசரி, டக்கு மகராஜ் போன்ற ஆக்ஷன் திரைப்படங்களில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளில் நடித்து இளைஞர்களின் பேரரைட் ஹீரோவாக இருக்கிறார். மத்திய அரசு இந்த ஆண்டு பாலைய்யாவிற்கு பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவித்தது. பத்ம பூஷன் விருதினை பெற்ற பாலைய்யா, இதற்கு முன்பே இந்த விருது கிடைத்து இருக்க வேண்டும் என மக்கள் அடிக்கடி கூறினார்கள். ஆனால், இதுதான் சரியான தருணம் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், இப்போது தொடர்ச்சியாக நான்கு வெற்றிப் படங்களைக் கொடுத்து இருக்கிறேன். புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராகி 15 ஆண்டுகள் ஆகிறது. மேலும் ஒரு நடிகராகவும் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறேன். இதனால், விருதுவாங்க சரியான தருணம் என்றார்.
பாலைய்யாவிற்கு கிடைத்த கௌரவம்: இந்நிலையில், இந்திய பங்குச் சந்தையின் முக்கிய தளங்களில் ஒன்றான தேசிய பங்குச் சந்தையின் மணி அடிக்கும் நிகழ்வில் பாலைய்யா கலந்து கொண்டு மணி அடித்து தொடங்கி வைத்தார். NSEயில் மணி அடிக்கும் நிகழ்வு, இந்திய வணிக உலகில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. பங்குச் சந்தையின் வர்த்தக நாள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதைக் குறிக்கும் வகையில், அந்நாளின் வர்த்தகத்தின் தொடக்கத்திற்கான ஒரு சடங்காக இந்த நிகழ்வு உள்ளது. இதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு, நடிகர் பாலகிருஷ்ணாவுக்குத் திரையுலகத்தைத் தாண்டி கிடைத்த ஒரு புதிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. திரையுலக பிரபலங்கள் இதுபோன்ற நிதிச் சந்தை நிகழ்வுகளில் கலந்துகொள்வது மிகவும் அரிதான விஷயமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











