ஜெயலலிதாவும், மோடியும் உலகிலேயே சக்திவாய்ந்த தலைவர்கள்: நடிகர் விஜய் புகழாரம்

இதுகுறித்து நடிகர் விஜய் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் இந்திய அளவில் ஓர் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.தேசிய அளவில் அதிக இடங்களை கைப்பற்றிய நரேந்திரமோடிக்கும், தமிழகத்தில் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
உலக அளவில் பெரும் சக்தியாக திகழும் இந்த இரு தலைவர்களும் உலக அளவில் இந்தியாவை வல்லரசு நாடாகவும், இந்திய அளவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும் மாற்றி காட்டுவார்கள் என்ற கோடானு கோடி மக்களின் நம்பிக்கையில் நானும் ஒருவனாக இந்த வெற்றியை எண்ணி சந்தோஷமடைகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications