»   »  மைக் மோகன் பராக்! பராக்!!

மைக் மோகன் பராக்! பராக்!!

Subscribe to Oneindia Tamil

ரொம்ப நாளைக்கு முன்பு காணாமல் போன மைக் மோகன் மீண்டும் மேக்கப் போடதயாராகிறார்.

கமல்ஹாசன் வைத்திருந்த மைக்கைப் பிடுங்கி கொஞ்ச காலம் கோலிவுட்டில்வாசித்து வந்தவர் மோகன். அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டம் தியேட்டர்களுக்குப்படையெடுத்தது ஒரு காலம்.

மிகப் பெரிய ஹீரோவாக விளங்கிய மோகன் காலப் போக்கில் காணாமல் போனார்.இடையில் உருவம் என்ற படத்தைத் தயாரித்து நடித்தார். ஆனால் உருவம், அருவம்இல்லாமல் காணாமல் போய் விட்டது.

அதன் பிறகு சுத்தமாக ஆஃப் ஆகி விட்டார் மோகன் தனது சொந்த ஊரானபெங்களூருக்கே போய்விட்டார். தனது தாய் மொழியான கன்னடத்தில் சிலபடங்களில் நடித்ததோடு காணாமல் போனார்.

இடையில் அவருக்கு அந்த நோய், இந்த நோய் என்று வேறு திடீரென புரளிகிளம்பியது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை, ஜம்மென்று இருக்கிறேன் எனபேட்டி கொடுத்து வதந்தியை கிளியர் செய்தார் மோகன்.

அதன் பின்னர் டிவி தொடர்கள் தயாரிப்பில் மும்முரமாக இறங்கினார். வெற்றிகரமாகசில தொடர்களையும் தயாரித்தார். இப்போது மீண்டும் நடிக்கக் கிளம்பியுள்ளார்.

மெரீனா கடற்கரையில் பட்டப் பகலில் படு கேஷுவலாக போலீஸாரால் போட்டுத்தள்ளப்பட்ட அயோத்தி குப்பம் வீரமணியின் வாழ்க்கைக் கதையை பெருசு என்றபெயரில் படமாக இயக்கிய ஜி.கே.தான் மோகனை வைத்து அடுத்த படத்தை இயக்கப்போகிறாராம்.

முதல் படத்தை படு ஹாட்டாக கொடுத்த ஜி.கே. தனது அடுத்த படத்தை லைட்டாககொடுக்கப் போகிறார், அதாவது முழு நீள காமெடிப் படமாம் இது. படத்திற்கு சுட்டபழம் என சூப்பராக பெயரிட்டுள்ளார்.

முதல் படத்தில் நடித்த நீபாவே இப்படத்திலும் நடிப்பாரா என்று ஜி.கே.விடம்கேட்டால் கதைக்குப் பொருத்தமான ஒருவர் மோகனுக்கு ஜோடியாக நடிப்பார்என்றார்.

படத்தோட பன்ச் லைனாக அலும்பு ஆரம்பம் என வைத்துள்ளனர். இந்தக் கதைக்குயாரை நடிக்க வைக்கலாம் என ஜி.கே. யோசித்த போது மோகன் நினைவு வந்ததாம்.உடனே அவரிடம் சென்று கதையைச் சொல்லியுள்ளார்.

கதையைக் கேட்டதும் ஆர்வமாகி விட்ட மோகன், நிச்சயம் நான் நடிக்கிறேன்.திரையுலகில் எனது ரீ என்ட்ரிக்கு இது ரொம்பவே உதவும் என்று உணர்ச்சிவசப்பட்டாராம்.

படத்தில் மோகனுக்கு மைக் உண்டா என்று கேட்டால் பகபகவென சிரிக்கிறார் ஜி.கே.

மைக் டெஸ்டிங் 1, 2, 3!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil