பிளாட்பாரத்திலிருந்தே அப்படித்தான்.. ரஜினி Bloody Thalaivaதான்.. சீனியர் நடிகர் ஓபனா சொல்லிட்டாரே
சென்னை: தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான மோகன் பாபு ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் அவ்வளவு நட்புடன் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஜினி குறித்து மோகன் பாபு சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை கூறியிருக்கிறார். அவை யாவும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருகின்றன.
டோலிவுட்டின் ஃபேமஸ் நடிகர்களில் ஒருவர் மோகன் பாபு. ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனியிடத்தை பிடித்து வைத்திருக்கும் அவர் அரசியலிலும் நுழைந்தவர். ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பரான மோகன் பாபு இன்றுவரை தனது நட்பை தொடர்ந்துகொண்டிருக்கிறார். மேலும் நாட்டாமை படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து அவரை நடிக்க சொன்னது ரஜினி என்பதும்; அதில் அவரும் ஒரு கெஸ்ட் ரோல் செய்திருந்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.
ஒரே கப்பில் டீ: இரண்டு பேரும் சென்னை சினிமா கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். கல்லூரி காலத்தில் ஒருவருக்கொருவர் மிக மிக நட்போடு இருந்தார்கள். பணம் இல்லாத நேரத்தில் ஒரு கப்பில் டீ வாங்கி அதை பாதி பாதியாக குடித்த கதையெல்லாம் உண்டு. இன்றளவும் ரஜினிகாந்த்தை நினைத்த நேரத்தில் பார்ப்பதற்கும், அவரது அறைக்கே சென்று பேசுவதற்கும் மோகன் பாபுவால் மட்டும்தான் முடியும் என்ற பேச்சும் இருக்கிறது.

ஆலோசனையும் உண்டு: தனிப்பட்ட ரீதியாக மட்டுமின்றி தொழில்ரீதியாகவும் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் ஆலோசனை கொடுத்துக்கொண்டும், ஒருவர் வளர்ச்சியில் இன்னொருவர் அக்கறை கொண்டும், சந்தோஷப்படுவதும் நிகழும். உதாரணமாக தமிழில் வெளியாக சக்கைப்போடு போட்ட நாட்டாமை திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்கும்படி மோகன் பாபுவுக்கு ஐடியா கொடுத்ததே ரஜினிகாந்த்தான்.
கெஸ்ட் ரோல்: அதுமட்டுமின்றி அந்தப் படத்தில் ரஜினி ஒரு கெஸ்ட் ரோலையும் செய்திருந்தார். ரஜினி கணித்தபடியே டோலிவுட்டிலும் அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அப்படம்தான் மோகன் பாபுவுக்கு ஒரு கம்பேக்காக அமைந்தது என்ற பேச்சும் பரவலாக உண்டு. அதேபோல் மோகன் சொல்லியும் ரஜினிகாந்த் சில படங்களில் வேலை பார்த்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இரண்டு பேரும் சேர்ந்து தொழில்கள் சிலவற்றை செய்துவருவதாகவும்கூட அரசல் புரசலாக ஒரு தகவல் உண்டு.
பாராட்டிய ரஜினி: சமீபத்தில்கூட மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு நடித்த கண்ணப்பா திரைப்படம் வெளியாகி தோல்வியடைந்தது. படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக ரஜினியின் வீட்டில் வைத்து அந்தப் படத்தி திரையிட்டு காண்பித்தார்கள் மோகன் பாபுவும் அவரது மகன் விஷ்ணு மஞ்சுவும். படத்தை பார்த்துவிட்டு விஷ்ணுவை ரஜினிகாந்த் ஆரத்தழுவி பாராட்டினார். அதுகுறித்து எமோஷனலாக ட்வீட்டும் போட்டிருந்தார் விஷ்ணு.
மோகன் பாபுவின் பேட்டி: இந்நிலையில் மோகன் பாபு கொடுத்த ஒரு பேட்டியில் ரஜினிகாந்த் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "ரஜினியை எனக்கு சென்னை பிளாட்பாரத்திலிருந்தே தெரியும். எங்கள் இரண்டு பேரிடமும் ஒன்றுமே இல்லாதபோதுதான் நாங்கள் முதன்முதலாக சந்தித்துக்கொண்டோம். இப்போது நான் ரஜினியை எங்கு சந்தித்தாலும் பிளடி தலைவா என்றுதான் அழைப்பேன்" என கூறியிருக்கிறார். இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. மேலும், இவர்களுக்கு இவ்வளவு பெரிய நட்பா என்றும் ஆச்சரியத்தோடு ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











