அஜித் சம்பளம் வாங்கிட்டு அவர் வேலையை பார்க்குறாரு.. எல்லாத்துக்கும் காரணம் அவங்க தான் - மோகன். ஜி!
சென்னை: விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வராது என்பதை இன்று காலை கூட லைகா நிறுவனம் அறிவித்திருக்கலாம். ஆனால், அஜித் ரசிகர்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை நள்ளிரவிலேயே கெடுக்கும் வகையில் வெளியான அறிவிப்பால் லைகா நிறுவனத்தை மட்டுமின்றி அஜித்தையும் சேர்த்து ரசிகர்கள் கண்டபடி திட்டி வருகின்றனர்.
ஜனவரி மாதம் நடைபெற உள்ள பைக் ரேஸ் காரணமாகத்தான் விடாமுயற்சி படத்தின் ரிலீஸை அஜித் குமார் தள்ளி வைத்துள்ளார் என்றும் ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தை அனுமதி பெறாமல் சுட்டதன் காரணமாக எழுந்துள்ள வழக்கு சிக்கல் தான் காரணம் என ஏகப்பட்ட விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், அஜித் சினிமாவை விட்டே விலகி விடவேண்டும் என அஜித் ரசிகர்களே சிலர் ட்வீட் போட்டு வரும் நிலையில், அவர்களுக்கு அட்வைஸ் சொல்லும் விதமாக இயக்குநர் மோகன். ஜி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், லைகா நிறுவனத்தின் மீதுதான் அனைத்து தவறும் உள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
லைகா நிறுவனத்துக்கு அடிமேல் அடி: பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் வெற்றியை சந்தித்த லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2, லால் சலாம், வேட்டையன், மிஷன் சாப்டர் ஒன் என தொடர்ந்து பல தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்தியன் 3 படமும் வெளியாகுமா? என்பது சந்தேகம் தான் என்று கூறுகின்றனர். இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகவில்லை.
அஜித்தை திட்டும் ரசிகர்கள்: "கடவுளே அஜித்தே"ன்னு கோஷம் போட வேண்டாம் என அஜித் சொன்னதும் ரசிகர்கள் ஓகே ஏகே என சொல்லிவிட்டு அதனை நிறுத்திக் கொண்டனர். ஆனால், ரசிகர்களுக்காக பொங்கல் பண்டிகையன்று விடாமுயற்சி வெளியாகும், குட் பேட் அக்லி வெளியாகும் என ஆசைக்காட்டிவிட்டு கடைசி நேரத்தில் இப்படி கை விரித்தால் என்ன ஏகே என ரசிகர்கள் பொறுமையை இழந்து அவரையே இந்த முறை திட்ட துணிந்துவிட்டனர். சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு ரேஸ் பக்கமே போய்விடுங்கள் அஜித் என விளாசி உள்ளனர்.
ரசிகர்களுக்காக அல்லும் பகலும்: விடாமுயற்சி படம் தாமதமாகிறது என்று தெரிந்ததும் ரசிகர்களுக்காக குட் பேட் அக்லி படத்தையும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட விடாமுயற்சி படத்தையும் டபுள் கால்ஷீட் வேலை பார்த்து அஜித் முடித்துக் கொடுத்தார். ஆனால், அவருடைய உழைப்பை புரிந்துக் கொள்ளாமல் உடல் எடையை குறைத்த கஷ்டத்தை உணராமல் ரசிகர்கள் இப்படி திட்டுகின்றனரே என்பதை அறிந்து மோகன். ஜி கடுப்பாகிவிட்டார்.
லைகா தான் காரணம்: நடிகர் அஜித் குமார் சம்பளம் வாங்கிவிட்டு படங்களில் நடித்து வருகிறார். அவர் தனது பணியை முழுமையாக செய்துக் கொடுத்து டப்பிங் வரை பேசி முடித்துவிட்டார். சொன்ன தேதியில் படத்தை இறக்க வேண்டியது லைகா நிறுவனத்தின் கடமை. ஆனால், சில சட்ட சிக்கல்களில் சிக்கியிருப்பதால் அந்த நிறுவனம் தான் பொங்கலுக்கு படத்தை வெளியிடாமல் தாமதப்படுத்தி வருகிறது. இதில், அஜித் குமாரை திட்ட வேண்டிய அவசியம் என்ன என ரசிகர் ஒருவர் அஜித்தை திட்டிப் போட்ட கமெண்ட்டுக்கு திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன். ஜி கமெண்ட் போட்டு கண்டித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











