'தமிழர் தேசத்தில்' லால் கச்சேரி
தமிழர்கள் அதிகம் வசிக்கும் நியூயார்க், டோரண்டோ உள்ளிட்ட நகரங்களில் வெற்றிகரமாக தனது இசை நிகழ்ச்சியை நடத்தி விட்டு ஊர் திரும்பியுள்ளார் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்.
| Click here for more images |
போன இடமெல்லாம் லால் கச்சேரிக்கு நல்ல வரவேற்பாம். குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் நியூயார்க் மற்றும் டோரண்டோ நகரங்களில் செமத்தியான வரவேற்பு கிடைத்ததாம்.
மலையாளிகள் மட்டுமல்லாது தென்னிந்தியர்கள் பெரும் திரளாக திரண்டு வந்து லால் கலை நிகழ்ச்சியைக் கண்டும், கேட்டும் ரசித்தார்களாம்.
கலை நிகழ்ச்சியை முடித்து விட்டு ஊர் திரும்பியுள்ள மோகன்லால், அடுத்து தனது வேலையில் தீவிரமாக இறங்கி விட்டார். ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள ராக் அண்ட் ரோல் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இப்படத்தில் ராக் அண்ட் ரோல் சிங்கராக வருகிறாராம் மோகன்லால். இதற்காக வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் கலக்கவுள்ளாராம்.


Click it and Unblock the Notifications