அஜித்குமார்.. அந்தப் பெயரை சொன்னால் போதுமே.. ஓபனாக பேசிய மோகன் லால்
சென்னை: அஜித் நடிப்பில் கடந்த மாதம் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. எதிர்பார்ப்புடன் வெளியான படம் கலவையான விமர்சனத்தையே பெற்றிருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸாகிறது. குட் பேட் அக்லி படத்துக்கு ரசிகர்களிடையே உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில் அஜித் பற்றி மலையாள நடிகர் மோகன் லால் பேசியிருப்பது ட்ரெண்டாகியிருக்கிறது.
துணிவு படத்துக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித்குமார். பிரேக் டவுன் என்கிற ஆங்கில படத்தை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது. விடாமுயற்சியில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் கமிட்டானார் அவர். ஒரே நேரத்தில் அஜித் இரண்டு படங்களில் பல வருடங்களுக்கு பிறகு நடித்தார். அதற்கு காரணம் கார் ரேஸ். இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு தனக்கு பிடித்த கார் ரேஸில் கவனம் செலுத்த முடிவு செய்துதான் இப்படி ஒரு விஷயத்தில் இறங்கினார்.
விடாமுயற்சி ரிலீஸ்: விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான அந்தப் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றிருக்கிறது. வசூல் ரீதியாகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அஜித் என்ற மாஸ் ஹீரோவுக்கான படமே இது இல்லை என்று ஒருதரப்பினர் கூறினார்கள். அதேசமயம் ஒரு பெரிய ஸ்டார்டம் உள்ள ஹீரோ இந்த மாதிரியான கதையில் நடிப்பது எல்லாம் அபூர்வம்; படம் நன்றாகத்தான் இருக்கிறது என்று இன்னொரு தரப்பினர் அழுத்தமாக சொன்னார்கள்.

குட் பேட் அக்லி ரிலீஸ்: ஆனால் அஜித்தின் தீவிர ரசிகர்களில் பெரும்பாலானோருக்கு படம் பிடிக்கவில்லை. அவர்கள் அனைவரும் ஆதிக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி படத்துக்காக காத்திருக்கிறார்கள். அந்தப் படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஒரே வருடத்தில் அஜித்தின் இரண்டு படங்கள் ரிலீஸாவதும் பல வருடங்களுக்கு பிறகு நடப்பது என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் அஜித்தின் ரசிகர் என்பதால் கண்டிப்பாக தேவையான மாஸ் சீன்களை படத்தில் வைத்திருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
வரவேற்பை பெற்ற டீசர், சிங்கிள்: சூழல் இப்படி இருக்க படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. அதில் ஏகப்பட்ட கூஸ்பம்ப்ஸ் மொமண்ட்டுகள் இருந்தன. அதேபோல் அடுத்ததாக படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதனை ஜிவி பிரகாஷ், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பாடியிருந்தனர். அதனையடுத்து இரண்டாவது சிங்கிள் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு அஜித் படத்துக்கு இசையமைத்திருக்கிறார் ஜிவி. ஆனாலும் ரசிகர்கள் பாடல்களை கேட்டு கொஞ்சம் அப்செட்டில்தான் இருக்கிறார்கள்.
மோகன் லால் பேட்டி: இந்நிலையில் பிரபல நடிகரான மோகன் லால் எம்புரான் படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்டபோது அவரிடம் அஜித் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அஜித்குமார் என்று சொன்னாலே எனக்கு பிடிக்கும். படமெல்லாம் தேவையா. அஜித்தையே எனக்கு மிக மிக பிடிக்கும்" என்று கூறினார். இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் அட அஜித் பற்றி மோகன் லால் வேற லெவலில் பேசியிருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். முன்னதாக லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











