பெண் ரசிகையின் தாலியில் புகைப்படம்.. அதிர்ந்துபோன வெள்ளிவிழா நாயகன் மோகன்
சென்னை: மோகன் ஹீரோவாக நடித்திருக்கும் ஹரா படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். அடுத்ததாக விஜய்யுடன் அவர் நடித்திருகும் GOAT படம் வெளியாகவிருக்கிறது. இதில் அவருக்கு முக்கியமான ரோல் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் அதிர்ந்துபோன சம்பவத்தை நினைவுகூர்ந்திருக்கிறார். அது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
பாலுமகேந்திரா இயக்கிய கோகிலா என்ற கன்னட படத்தில் அறிமுகமானார் மோகன். அதில் அவருடன் கமல் ஹாசனும் நடித்திருந்தார். படம் மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி மோகனுக்கும் நல்லதொரு அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்துக்கு பிறகு மலையாளத்தில் அறிமுகமான அவர்; பின்னர் மூடுபனி படத்தின் மூலம் தமிழில் இண்ட்ரோ ஆனார். மூடுபனி படத்தையும் பாலுமகேந்திரா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஸி நடிகர்: மூடுபனி படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மோகனுக்கும் சிறந்த அடையாளத்தை தந்தது. இதன் காரணமாக முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த ஹீரோவானார் மோகன். அதனைத் தொடர்ந்து தமிழில் அவர், நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, காற்றுக்கென்ன வேலி, லாட்டரி டிக்கெட், கோபுரங்கள் சாய்வதில்லை என்று வரிசையாக படங்களில் நடித்தார். இதனால் அவர் பிஸியான நடிகராகவும் வலம் வர ஆரம்பித்தார்.
முன்னணி மோகன்: தொடர்ந்து அவர் நடித்த படங்கள் ஒன்று சூப்பர் ஹிட்டாகின அல்லது சுமார் ஹிட்டாகின. பிறகு லெஜெண்ட் இயக்குநர்களின் பார்வை மோகன் மீது திரும்பியது. தொடர்ந்து பாலுமகேந்திரா இயக்கத்தில் ரெட்டை வால் குருவி, மணிரத்னம் இயக்கத்தில் மௌன ராகம், மெல்ல திறந்தது கதவு, உதய கீதம் என்று அவர் நடித்ததெல்லாம் ஹிட்டாகின. குறிப்பாக நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்றார்.
பெண் ரசிகைகள்: முக்கியமாக மோகனுக்கென்று பெண் ரசிகைகள் கணிசமாக உருவாகினர். அதற்கு காரணம் அவரது பக்குவமான அழகும், எந்தவிதமான மோசமான கேரக்டரிலும் அவர் நடிக்காமல் இருந்ததுதான். மேலும் அவரது படங்களில் இடம்பெற்ற பாடல்களும் பெண் ரசிகைகளை வெகுவாக கவர்ந்தன. இதனால் அவர் 80களின் சாக்லேட் பாயாக வலம் வர தொடங்கினார்.
ரீ எண்ட்ரி: இப்படி அவரது கரியர் பீக்கில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென அவருக்கு சறுக்கல் ஏற்பட்டு; ஆள் காணாமல் போனார். பல வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் விஜய் நடிக்கும் GOAT படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அவர்; ஹரா என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றது.
மோகன் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "ஒருமுறை மலேசியாவிலிருந்து நான் விமானத்தில் வந்துகொண்டிருந்தேன். அப்போது விமானத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது மகனுடன் அமர்ந்திருந்தார். என்னை பார்த்ததும் பேசிக்கொண்டு வந்தார். அந்தச் சமயத்தில் அவரது மகன், அம்மா அதை காமிங்க என்று கூறினார். இவர் தனது தாலி செயினை வெளியே எடுத்து அதில் இருந்த லாக்கெட்டை திறந்து காண்பித்தார். அதில் எனது புகைப்படம் இருந்தது. நான் அதிர்ச்சியடைந்ததை உணர்ந்துகொண்ட அவர், 'எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். திருமணமான புதிதில் எனது கணவரிடம் இதை காட்டினேன். அவர் சரி வைத்துக்கொள் என்றார். அப்போதிருந்து வைத்திருக்கிறேன். சாகும் வரை வைத்திருப்பேன்' என கூறியதாக மோகன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











