கில்லி பாபுவாக மாறிய மோகன்லால்.. வழக்கில் இருந்து மீண்ட திலீப்புக்கும் ரெஸ்பான்ஸ்.. விஜய் ரெஃபரன்ஸ்!
திருவனந்தபுரம்: தனஞ்செய் சங்கர் இயக்கத்தில் மோகன்லால், திலீப் நடிப்பில் உருவான 'Bha Bha Bha' (பயம் பக்தி பகுமானம்) திரைப்படம் இன்று (டிசம்பர் 18) உலகம் முழுவதும் வெளியானது. கேரள நடிகைக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய திலீப் மீதான குற்றங்கள் சரியாக நிரூபிக்கப்படவிலலி என தீர்ப்பு வந்த நிலையில், திலீப் சத்தியமே ஜெயிக்கும் என்றார்.
மோகன்லால் உடன் திலீப் இணைந்து நடித்த திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், கேரள ரசிகர்கள் திரையரங்குகளில் அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இதில், ஹைலைட்டே என்னவென்றால், அந்த படத்தில் மோகன்லால் கில்லி பாபு எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது தான். படம் முழுக்கவே விஜய் ரெஃபரன்ஸ்களில் மோகன்லால் நடித்திருக்கும் நிலையில், அந்த படத்தை கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்களை தாண்டி தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
விஜய் ரசிகராக மாறிய மோகன்லால்: ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த மலையாள திரையுலக ஜாம்பவான் இந்த படத்தில் விஜய் ரசிகராக அதுவும் கில்லி பாபுவாக நடித்திருப்பது தான் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு மோகன்லால் நடித்த எம்புரான், தொடரும், ஹிருதயப்பூர்வம் உள்ளிட்ட படங்கள் வெளியாகி வெற்றிப் பெற்ற நிலையில், விஜய் ரசிகராக மோகன்லால் நடித்துள்ள 'பா பா பா' திரைப்படமும் வெற்றிப் படமாக மாறும் எனக் கூறுகின்றனர்.
திலீப் ரசிகர்கள் உற்சாகம்: மோகன்லால் உடன் திலீப் இணைந்து நடித்துள்ள 'பா பா பா' படத்தை திலீப் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகை வழக்கில் சிக்கி பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்து வந்த திலீப் மீண்டும் மலையாள திரையுலகில் தனது மார்க்கெட்டை மீட்டெடுப்பார் எனக் கூறுகின்றனர்.
எதிர்ப்புகளும் அதிகம்: அதே சமயம் கேரளாவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடந்த மீ டூ விவகாரங்களிலேயே மோகன்லால் பெரிதாக பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுக்காமல், அம்மா அமைப்பில் அங்கம் வகித்து வந்த தலைவர் பதவியையே வேண்டாம் என ஒதுங்கி விட்டார். இந்நிலையில், நடிகையின் வழக்கில் இருந்து தப்பித்த திலீப்புக்கு மோகன்லால் துணை போவதற்கு எதிராக மலையாள திரையுலகின் சில முன்னணி நடிகைகளே தங்களின் எதிர்ப்பை இந்த படத்துக்கு எதிராக வெளிப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











