Don't Miss!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சூர்யா படத்தில் மோகன்லால்.. சூர்யாவின் மலையாள பாசம் இதற்குத்தானா?
Recommended Video
சென்னை : 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் 'என் ஜி கே' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.
'அயன்', 'மாற்றான்' ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் கே.வி.ஆனந்த். இந்தப் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.
இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். 'ஜில்லா' படத்திற்கு பிறகு தமிழில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவிருக்கிறார் மோகன்லால். அவர் தவிர, தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான அல்லு சிரிஷும் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இவர் அல்லு அர்ஜூனின் தம்பி.
சூர்யாவிற்கு மலையாள ரசிகர்கள் மத்தியில் ஏற்கெனவே, நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு கொச்சின், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களைக் கவர்ந்தார் சூர்யா.
சமீபத்தில் நடைபெற்ற மலையாள நட்சத்திர கலைவிழாவிலும் கலந்துகொண்டார். மலையாள நடிகர் சங்கத்திற்கு 10 லட்ச ரூபாய் நன்கொடையும் அளித்தார். சூர்யாவுக்கு மலையாளத்தில் ரசிகர்கள் அடித்தளமும் இருக்கிறது.
இப்போது, மோகன்லால் உடன் நடிப்பதன் மூலம் இன்னும் வலுவாக தனது மார்க்கெட்டை கேரளாவில் நிறுவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் தவிர, மலையாளம், தெலுங்கு ரசிகர்களையும் அதிகமாக ஈர்க்க முயற்சித்து வருகிறார் சூர்யா.