உயரமான கட்டிடம்.. துபாயில் ஆடம்பர வீடு வாங்கிய மோகன்லால்.. வைரலாகும் போட்டோஸ்!

By

கொச்சி: பிரபல நடிகர் மோகன்லால், துபாயில் மேலும் ஓர் ஆடம்பரமான வீடு வாங்கியுள்ளார்.

பிரபல மலையாள நடிகர் மோகன்லால். தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்துள்ள மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் என்ற படத்தின் ரிலீஸ் கொரோனாவால் தடைப்பட்டுள்ளது.

முதல் பார்ட் மீனா

முதல் பார்ட் மீனா

ஜனவரிக்கு பிறகு இந்தப் படம் வெளியாகும் என்று தெரிகிறது. இதற்கிடையே, சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தின் 2 ஆம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். முதல் பாகத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இதையும் இயக்கியுள்ளார். முதல் பார்ட்டில் நடித்த மீனா, எஸ்தர் அணில் உட்பட பலர் இதிலும் நடித்துள்ளனர்.

துபாய் ஸ்டேடியம்

துபாய் ஸ்டேடியம்

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இதன் ஷூட்டிங் முடிந்ததுமே அவர் துபாய் சென்றார். அங்கு, ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டி நடந்தபோது அவர் துபாய் ஸ்டேடியத்துக்கு வந்திருந்த காட்சிகள் சேனலில் வெளியாயின. இது தொடர்பான புகைப்படங்களும் வைரலாயின.

ஒன்றாக தீபாவளி

ஒன்றாக தீபாவளி

பின்னர், அவரும் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்தும் ஒன்றாக தீபாவளியை கொண்டாடினர். மும்பையில் உள்ள சஞ்சய் தத் வீட்டுக்குச் சென்ற நடிகர் மோகன் லாலை, சஞ்சய் தத்தும் அவர் மனைவி மானியதாவும் வரவேற்றனர். அங்கு அவர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.

ஆர்பி ஹைட்ஸ்

ஆர்பி ஹைட்ஸ்

இந்நிலையில், நடிகர் மோகன்லால், துபாயில் அபார்ட்மென்ட் ஒன்றில், ஆடம்பரமான வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த அபார்ட்மென்ட்டின் புகைப்படம், சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளன. ஆர்பி ஹைட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இந்த வீட்டை அவர் வாங்கியுள்ளார்.

துபாய் மால் எதிரில்

துபாய் மால் எதிரில்

துபாய் மாலுக்கு எதிரில் இந்த அபார்ட்மென்ட் உள்ளது. இங்கு கடந்த 12 ஆம் தேதி கிரகப்பிரவேசம் நடந்துள்ளது. அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மோகன்லாலின் சிறு வயது நண்பரும் அவருடைய முதல் படத்தின் இயக்குனருமான அசோக்குமாரின் மனைவி பீனா பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

புர்ஜ் கலிஃபா

புர்ஜ் கலிஃபா

இந்தப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. பல நெட்டிசன்ஸ் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மோகன்லாலிடம் பல ஆடம்பர கார்கள் உள்ளன. சென்னை உட்பட சில நகரங்களில் பல வீடுகளும் அவருக்கு இருக்கின்றன. துபாயில், உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவிலும்
ஏற்கனவே அவருக்கு வீடு இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X