ஹீரோ .. ஹீரோ ..
தமிழ் சினிமாவுக்கும், மோகன்லாலுக்கும் ஏழாம் பொருத்தம். மம்முட்டி, ஜெயராம் ஆகியோர் முத்திரை பதித்தஅளவுக்கு இவரால் முடியவில்லை. அதனால் தமிழ்ப் படங்களில் நடிப்பதே இல்லை என்ற கொள்கை முடிவில்இருக்கும் மோகன்லால் தனது புதிய மலையாள படத்தில் எம்.ஜி.ஆர். ரசிகராக நடித்திருக்கிறார்.
பிரியதர்ஷன் படம் என்பதாலும், பிரபுவும் நடித்திருக்கிறார் என்பதாலும் சிறைச்சாலை படம் ஓரளவு தப்பியது.இருவரில் நடித்தார், படம் பிளாப். பின்னர் நாசர் கேட்டுக் கொண்டார் என்பதற்காக பாப்கார்ன் என்ற படத்தில்நடித்தார். சொந்தக் குரலில்தான் பேசுவேன் என்று வலுக்கட்டாயமாகக் கூறி தமிழைக் கடித்துத் துப்பியதால்,படத்தை தூர எறிந்து விட்டார்கள் ரசிகர்கள். அத்துடன் தமிழே வேண்டாம் என்று கூறி விட்டு ஒதுங்கினார்மோகன்லால்.
இப்போது அவர் நடித்துள்ள வாமனபுரம் பஸ் ரூட் என்ற மலையாளப் படத்தில் எம்.ஜி.ஆர். ரசிகராகநடித்துள்ளாராம் மோகன்லால். இதில் சில காட்சிகளில் எம்.ஜி.ஆர். வருவது போல கிராபிக்ஸ் மூலம் சீன்சேர்த்துள்ளார்களாம்.
தமிழ் வேண்டாம் என்று கூறிய மோகன் லால், தமிழில் நடித்துப் பெயர் பெற்றாலும், மலையாளி என்றஅடிப்படையில் எம்.ஜி.ஆரை காப்பியடித்துள்ளார் போலும்.


Click it and Unblock the Notifications











