»   »  ஆர்பி செளத்ரி மீது மோகன்லால் கோபம்

ஆர்பி செளத்ரி மீது மோகன்லால் கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கீர்த்தி சக்ரா மலையாளப் படத்தின் தமிழ்ப் பதிப்பான அரண் படத்தில் தனக்குப் பதில்நடிகர் ராஜீவை விட்டு டப்பிங் பேச வைத்தது தனக்கு வருத்தம் அளித்துள்ளதாகமலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் விசனப்பட்டுள்ளார்.

மோகன்லால், ஜீவா, கோபிகா நடிப்பில் மேஜர் ரவி இயக்கத்தில் உருவான படம்கீர்த்தி சக்ரா. மலையாளத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தை தமிழில் அரண் என்றபெயரில் டப் செய்துள்ளனர். ஜீவாவுக்காக சில புதிய காட்சிகளை சேர்த்துள்ளனர்.

இதில் மோகன்லாலுக்கு நடிகர் ராஜீவ் குரல் கொடுத்துள்ளார். இதனால் மோகன்லால்அப்செட் ஆகியுள்ளார். இதுகுறித்து மோகன் லால் கூறுகையில்,

தமிழில் எனக்குப் பதில் நடிகர் ராஜீவ் பேசியுள்ளார். இது எனக்கு சுத்தமாகபிடிக்கவில்லை. இதுகுறித்து தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடம் கேட்டபோது, நீண்டவசனங்கள் பேச வேண்டியிருந்ததால் ராஜீவை டப்பிங் பேச வைத்ததாக கூறினார்.

இது சரியான பதில் அல்ல. நீண்ட தமிழ் வசனங்களை என்னால் பேச முடியாதுஎன்பதை ஏற்க முடியாது. ஏற்கனவே மணிரத்தினத்தின் இருவர் படத்தில் நான்தான்பேசினேன். அப்படம் ஓடவில்லையா? (இல்லையே!)

அரண் படத்திலும் நானே வசனம் பேசியிருக்க முடியும். ஆனால் ராஜீவை பேசவைத்துள்ளனர். இதுகுறித்து என்னிடம் கேட்கவில்லை. மேஜர் ரவி எனக்கு நல்லநண்பர். அவர் கூட இதுகுறித்து கேட்காதது என்னிடம் கேட்காதது ஆச்சரியமாகஉள்ளது.

அரண் படத்தில் ஜீவாவுக்காக கூடுதலாக சில காட்சிகளை சேர்த்துள்ளனர்.காமெடிக்காட்சிகளையும் சேர்த்துள்ளனர். மலையாளத்தில் இவை இல்லை.

எனக்காக இன்னொருவர் டப்பிங் பேசியதை நான் ஏற்க மாட்டேன். இது சரியல்ல.ஒரு நல்ல நடிகர், எந்த மொழிப் படமாக இருந்தாலும் சொந்தக் குரலில்தான் பேசவேண்டும். அப்போதுதான் அந்த கேரக்டர் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்மோகன்லால்.

இருவர் படத்தில் எம்ஜிஆர் கேரக்டருக்கு மோகன்லால் பேசிய தமிழ் ஓ.கேவாகஇருந்தது.

ஆனால் பாப்கார்ன் என்ற பெயரில் நாசர் தயாரித்த படத்தில் மோகன்லால் பேசியதமிழை அத்தனை பேருமே விமர்சித்தார்கள். இந்த விமர்சனத்திற்குப் பிறகுதான்இனிமேல் நேரடித் தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன் என்ற முடிவுக்கு வந்தார்மோகன்லால் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil