கௌதம் மேனனின் “மூணு முப்பத்தி மூணு“ … சூப்பர் தகவலை வெளியிட்ட படக்குழு!

சென்னை : சாண்டி, கௌதம் மேனனின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மூணு முப்பத்தி மூணு.

இத்திரைப்படம் குறித்த கலக்கலான அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

திகில் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

டைரக்டர் நம்பிக்கை சந்த்ரு இயக்கத்தில் உருவாகியுள்ள திகில் படம் மூணு முப்பத்தி மூணு. வித்தியாசமான தலைப்பு மட்டுமின்றி திகில் படமாகவும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படமாகவும் இத்திரைப்படம் உருவாகி உள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன்

கௌதம் வாசுதேவ் மேனன்

இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் இப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சாண்டி, சரவணன், ரமா, ரேஷ்மா பசுபெலட்டி, மைம் கோபி மற்றும் ஷ்ருதி செல்வம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்துள்ளார் ஹர்ஷவர்தன் ராமேஸ்வர். பாம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜீவிதா கிஷோர் படத்தை தயாரித்துள்ளார்.

யுஏ சான்றிதழ்

யுஏ சான்றிதழ்

இந்நிலையில் இத்திரைப்படம் குறித்த முக்கியமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யுஏ' சான்றிதழ் அளித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகராக

நடிகராக

மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க , வாரணம் ஆயிரம் போன்ற மாஸான திரைப்படங்களை இயக்கிய கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கும் திரைப்படங்களில் சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே நடித்து வந்த கௌதம் மேனன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பார். இதையடுத்து,பல திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ருத்ரதாண்டவம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் அக்டோபர் 1ந் தேதி வெளியாக உள்ளது.

வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு

கௌதம் மேனன் தற்போது, ஜோஸ்வா இமைபோல் காக்க, துருவ நட்சத்திரம் மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய மூன்று திரைப்படங்கள் இயக்கி வருகிறார். இதில் மூன்று திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவடையும் தருவாயில் இருப்பதால் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X