விஸ்வரூபம் 2 எந்த நேரமும் வெளியாகலாம்!- கமல்

By Shankar

சென்னை: விஸ்வரூபம் பட வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. எந்த நேரமும் அந்தப் படம் வெளியாகலாம் என படத்தின் இயக்குநரும் ஹீரோவுமான கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாஸன் ரசிகர்களுக்கு இது கொண்டாட்ட ஆண்டு. எண்பதுகளில் இருந்தது போல, மகா பிஸியாக உள்ளார் கமல்.

மூன்று படங்கள்

மூன்று படங்கள்

ஒரே நேரத்தில் அவரது மூன்று பட வேலைகள் நடக்கின்றன. அவர் நடிப்பில் நடித்து வரும் உத்தமவில்லன் நகைச்சுவை படம் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்து மோகன்லால் நடிப்பில் ,வெளியான மலையாள படமான த்ரிஷ்யம் படத்தின் த்மிழ் ரீ மேக்கில் கமல் நடிக்க உள்ளார். அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

விஸ்வரூபம் 2

விஸ்வரூபம் 2

விஸ்வரூபம்-2 விரைவில் தமிழ்-மற்றும் இந்தி இருமொழிகளில் வெளியாக உள்ளது.தமிழ் படத்தை வி.ரவிசந்திரனும், இந்தி மொழி படத்தை எக்தாகபூர்,ஷோபா கபூரும் தயாரித்துள்ளனர்.

எந்த நேரமும்

எந்த நேரமும்

இது குறித்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன் நாங்கள் விஸ்பரூபம் 2 படம் முடிந்துவிட்டது.சில பேட்ச் வேலைகள் மட்டுமே உள்ளன. தயாரிப்புக்கு பிந்தைய வேலைகளில் நடைபெற்று வருகின்றன. முடிந்ததும் எந்த நேரமும் படம் வெளியாகலாம்.

செப்டம்பரில்

செப்டம்பரில்

விரைவில் விஸ்வரூபம் 2 வெளியான பிறகு, உத்தம வில்லன் படம் செப்டம்பர் 10-ம் தேதி வெளியிடப்படுகிறது. லிங்குசாமி தயாரிக்கும் இந்தப் படத்தை, நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.

த்ரிஷ்யம் ரீமேக்

த்ரிஷ்யம் ரீமேக்

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் த்ரிஷ்யம் படத்தின் ரீஇ மேக் ஜூலை 15 ந்தேதி தொடங்குகிறது. இந்தப் படத்தையும் இந்த ஆண்டே வெளியிட்டுவிட கமல் திட்டமிட்டுள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X