இளம் பெண்களின் கனவில் வரும் சாக்லேட் ஹீரோக்கள்

By Mayura Akilan

தமிழ் சினிமாவில் எத்தனையோ கதாநாயகர்கள் வந்து சென்றிருக்கின்றனர். சில ஹீரோக்கள் மட்டுமே 20 வருடங்கள் 30 வருடங்கள் காதல் இளவரசனாக தொடங்கி மன்னன் வரை இளம் பெண்களின் கனவுகளின் வந்து உறக்கத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பார்கள்.

80 களில் கமல்ஹாசன் ரஜினிகாந்த், சிவகுமார், சுரேஷ், பிரபு, மோகன் என அன்றைய பெண்களை கவர்ந்த கதாநாயகர்கள் இருந்தனர்.

90 களில் கார்த்திக், விஜய், அஜீத், அரவிந்த் சாமி, விக்ரம், அர்ஜூன், சூர்யா, மாதவன் என திரை உலக நாயகர்கள் கொடி கட்டிப் பறந்தனர்.

இவர்களுக்கு அடுத்த படியாக சிம்பு,தனுஷ், விஷால், கார்த்தி, என நட்சத்திர பட்டாளமே வலம் வருகிறது. அன்றைய கால கட்டத்தில் திருமணமான கதாநாயகர்கள் பலரும் கனவு நாயகர்களாகவே விரும்பப் பட்ட நிலையில் இன்றைக்கு அஜீத், விஜய், சூர்யா, கார்த்தி எல்லாம் கல்லூரி பெண்களின் மத்தியில் அங்கிள்காளாகி விட்டனர்.

தமிழ் சினிமாவில் இன்றைக்கும் திருமணமாகாமல் சாக்லேட் பாய்களாக வலம் வரும் இளம் கதாநாயகர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

எஸ்.டி.ஆர் என்ற சிம்பு

எஸ்.டி.ஆர் என்ற சிம்பு

லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆகி யங் சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ள சிலம்பரசன் ( எஸ்.டி.ஆர்) இன்றைக்கு இளம் பெண்களின் கனவுக் கண்ணனாக வலம் வருகிறார். விண்ணைத் தாண்டி வருவாயாதான் இளம் பெண்களின் மத்தியில் சிம்புவின் மதிப்பை உயர்த்திய படம்.

ஆர்யா என்ற காதல் நாயகன்

ஆர்யா என்ற காதல் நாயகன்

இளம் பெண்கள் மட்டுமல்லாது இளம் நடிகைகள் மத்தியிலும் ஆர்யாதான் காதல் ப்ளஸ் கனவு நாயகன். கூட நடிக்கும் நடிகைகளிடம் இருந்து எப்படியாவது முத்தம் பெற்றுவிடுவார் என்கின்றனர்.

கறுப்பான விஷால்

கறுப்பான விஷால்

ரசிகைகளை மட்டுமல்லாது சிலபல பெண்தோழிகளையும் அதிகம் கவர்கிறது விஷாலின் தோற்றம். உயரமும், நிறமும் விஷாலுக்கு ப்ளஸ் பாயிண்ட் என்கின்றனர்.

உயரமான ஆதி

உயரமான ஆதி

உயரம், அளவான நடிப்பு என இளம் நடிகர் ஆதிக்கு ப்ளஸ் பாயிண்ட். ஈரம் கைகொடுத்தாலும் அவர் அதிகம் நம்பிய அரவாண் ஏமாற்றிவிட்டான்.

உயரமான கணேஷ் வெங்கட்ராமன்

உயரமான கணேஷ் வெங்கட்ராமன்

அபியும் நானும் படத்தில் நடித்த கணேஷ் வெங்கட்ராமன் அதிகம் அறியப்பட்டது உன்னைப் போல் ஒருவன் படத்தில்தான். உயரத்திற்கு ஏற்ற உடலமைப்பு ஏராளமான ரசிகைகளை ஈர்க்கிறதாம்.

பாய்ஸ் ஸ்டார் பரத்

பாய்ஸ் ஸ்டார் பரத்

பாய்ஸ் படத்தில் அறிமுகமான பரத் இன்றைக்கு தனக்கென்று சில ரசிகைகள் பட்டாளத்தை கைவசம் வைத்திருக்கிறார். பாவம் அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள்தான் பரத்தின் காலை வாரி விடுகின்றன.

அப்பாவி அதர்வா

அப்பாவி அதர்வா

சிறுவன் தோற்றத்தில் இருக்கும் அதர்வாவிற்கு பாணா காத்தாடியை தொடர்ந்து அமலாபாலுடன் நடித்த படமும் கை கொடுக்கவில்லை. பரதேசி லுக் இளம் ரசிகைகளை கொஞ்சம் அச்சுறுத்தினாலும் நடிப்புக்கு ஓகே சொல்கின்றனர்.

அரசியல் வாரிசு அருள் நிதி

அரசியல் வாரிசு அருள் நிதி

வம்சம் படத்தில் நடித்த அருள்நிதி இன்றைக்கு தொடர்ந்து சில படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அரசியல் பின்புலம் இருந்தாலும் உயரம், பேச்சு ப்ளஸ் பாயிண்ட் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X