என் பாடலை இசைஞானி இளையராஜா பாடியது எனக்கு பெருமை – தனுஷ்

By Mayura Akilan

தான் எழுதிய பாடலை இசைஞானி இளையாராஜா பாடியிருப்பதால் சந்தோசத்தில் திக்குமுக்காடி வருகிறார் தனுஷ். இத்தனை நாள் பல பாடல்கள் எழுதியிருந்தாலும் இதுதான் நிறைவைத் தருகிறது என்றும் தனுஷ் கூறிவருகிறார்.

தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ள வை ராஜா வை படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ஒரு பாடலை பாடியிருககிறார் இளையராஜா. அந்த பாடலை எழுதியிருப்பவர் தனுஷ்.
கெளதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் 'வை ராஜா வை' படத்தில் யுவன் இசையமைத்திருக்கிறார்.

யுவனுடன் கைகோர்த்த ஐஸ்வர்யா

யுவனுடன் கைகோர்த்த ஐஸ்வர்யா

'3' படத்தின் இசைக்காக அனிருத் உடன் கைகோர்த்த ஐஸ்வர்யா தனுஷ், இப்படத்திற்காக யுவனுடன் கைகோத்து இருக்கிறார்.

5 பாடல்கள்

5 பாடல்கள்

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருக்கிறது இப்படத்தின் டீஸர் மட்டுமே வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இருக்கிறதாம். இதில் 4 பாடல்களை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார்.

மூவ் யுவர் பாடி

மூவ் யுவர் பாடி

'மூவ் யுவர் பாடி' என்ற பாடலை மட்டும் தனுஷ் எழுதியிருக்கிறார். தனுஷ் எழுதியிருக்கும் இப்பாடலை இளையராஜா பாடியிருக்கிறார். படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது யுவனின் இசை விரைவில் வெளிவர இருக்கிறது.

கவிஞரான தனுஷ்

கவிஞரான தனுஷ்

ஏற்கனவே மனைவி இயக்கிய 3 படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலை எழுதி பாடி பாடகராகவும் பிரபலமானவர் தனுஷ்.

இளையராஜா பாடினார்

இளையராஜா பாடினார்

இப்போது தான் எழுதிய பாடலை இளையராஜா பாடியிருப்பது அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இதுவரை நான் எத்தனை பாடல்கள் எழுதி பாடியிருந்தாலும் அதெல்லாம் எனக்கு பெரிதில்லை.

எனக்கு பெருமை

எனக்கு பெருமை

என் பாடலை இளையராஜா சார் பாடியிருப்பதுதான் எனக்கு பெருமை என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் தனுஷ்.

சீனுராமசாமி படத்தில்

சீனுராமசாமி படத்தில்

சமீபகாலமாக தான் இசையமைக்கும் படங்களில்கூட முன்பு மாதிரி பின்னணி பாடுவதில்லை இளையராஜா. அப்படிப்பட்ட அவரை சீனுராமசாமி இயக்கியுள்ள இடம் பொருள் ஏவல் படத்தில் பாட வைக்க ஒரு முயற்சி நடக்கிறது.

இளையராஜா பாடுவாரா?

இளையராஜா பாடுவாரா?

யுவன் இசையமைக்கும் அந்த படத்தில் இளையராஜா பாடுவாரா? மாட்டாரா? என்பதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஆனால் தனுஷ் எழுதிய பாடலைப் பாடி அவரை சந்தோசப்படுத்தியுள்ளார் இளையராஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X