ஓவர் பில்ட்அப் கொடுத்து புஸ்ஸான அஜீத், சூர்யா, கார்த்தி, விக்ரம் படங்கள்

By Siva

சென்னை: சில நடிகர்களின் படம் வருவதற்கு முன்பே அதைப் பற்றி ஏகப்பட்ட செய்திகள் வரும். அந்த செய்திகளைப் பார்த்து மக்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து தியேட்டருக்கு சென்று ஏமாற்றம் அடைந்த சம்பவங்கள் நடந்துள்ளன.

சில இயக்குனர்கள் சத்தமில்லாமல் படம் எடுத்து ரிலீஸ் செய்வார்கள். ஆனால் சிலர் படம் எடுக்கத் துவங்கியதில் இருந்து படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை கசிய விட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்த தகவலைப் பார்த்து மக்கள் ஆஹா இந்த படம் சூப்பராக இருக்கும் போல் இருக்கிறது. நிச்சயமாக தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிடுவார்கள்.

படம் எப்பொழுது ரிலீஸாகும் என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். அதிலும் அந்த படங்களில் தங்கள் மனம் கவர்ந்த ஹீரோ நடித்திருந்தார் என்றால் சொல்லவே தேவையில்லை. நம் ஹீரோவுக்கு இந்த படம் நிச்சயம் பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று அவர்கள் மனக்கோட்டையே கட்டிவிடுவார்கள். நல்ல தேதி பார்த்து படத்தை ரிலீஸ் செய்த பிறகு தியேட்டருக்கு சென்று பார்த்தால் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிவிடும். இவ்வாறு பெரிய எதிர்ப்பார்ப்புடன் சென்று ஏமாற்றம் அளித்த படங்களைப் பார்ப்போம்.

பில்லா 2

பில்லா 2

அஜீத் குமாரின் பில்லா 2 பெரிய ஹிட்டாகும் என்று நினைத்தார்கள். ஆனால் மக்களுக்கு படம் பிடிக்காமல் போனது. படத்தை படுகுழியில் தள்ளிய பெருமை திரைக்கதையைச் சேரும்.

முகமூடி

முகமூடி

ஜீவாவின் முகமூடி படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் ஏதோ ஓடினாலும் எதிர்பார்த்த அளவுக்கு சூப்பர் ஹிட்டாகவில்லை.

தாண்டவம்

தாண்டவம்

தெய்வத் திருமகள் படத்தில் மக்களை உருகவைத்த விக்ரம், ஏ.எல். விஜய் கூட்டணி தாண்டவம் படத்தில் ஏமாற்றிவிட்டனர்.

மாற்றான்

மாற்றான்

சூர்யா இரட்டை வேடத்தில் வந்த மாற்றான் மக்களை இம்பிரஸ் செய்ய முடியாமல் தோற்றுப்போனது. இரட்டை வேடத்தில் சூர்யா எப்படியெல்லாம் கலக்குவாரோ என்று எதிர்பார்த்த மக்கள் இவ்வளவு தானா என்று கூறும்படி ஆகிவிட்டது.

சகுனி

சகுனி

கார்த்தி நடித்த சகுனி படம் ரிலீஸாகும் முன்பே அதிகம் பேசப்பட்டது. சூர்யாவுக்கு எப்படி கஜினியோ, கார்த்திக்கு அப்படி சகுனி அமையும் என்றார்கள். ஆனால் சகுனியின் ஆட்டம் விறுவிறுப்பில்லாமல் போனது.

3

3

ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்த 3 படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. படம் ஓடாவிட்டாலும் தனுஷ், ஸ்ருதியின் நடிப்பு பேசப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X