96 கிலோ ஓவர் வெயிட்டில் இருந்து சூப்பர் ஃபிட்டாக மாறிய ‘மிஸ்டர் எக்ஸ்’ கெளதம் ராம் கார்த்திக்!
சென்னை: விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியான FIR படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கெளதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியர் நடித்துள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாக காத்திருக்கிறது.
துரந்தர் திரைப்படம் போல இந்த படமும் ஒரு பக்காவான ஸ்பை த்ரில்லர் படம் தான். ஏகப்பட்ட உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தான் படத்தை எடுத்துள்ளதாக மனு ஆனந்த் கூறியுள்ளார்.

மேலும், இந்த படத்திலும் மோடி வருவது போன்ற காட்சிகளையும் இயக்குநர் மனு ஆனந்த் படமாக்கியிருப்பது படத்தின் டிரைலரிலேயே வெளியாகி உள்ளது. இந்நிலையில், இந்த படத்துக்காக சூப்பர் ஸ்லிம்மாக கடல் படத்தில் பார்த்த கெளதம் கார்த்திக் போலவே மாறியுள்ள வீடியோவை கெளதம் ராம் கார்த்திக் தற்போது வெளியிட்டுள்ளார்.
96 கிலோ எடை: நவரச நாயகன் கார்த்தியின் மகன் கெளதம் ராம் கார்த்திக் மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ரங்கூன், வை ராஜா வை, இருட்டு அறையில் முரட்டுக் குத்து, தேவராட்டம், முத்துராமலிங்கம், பத்து தல என பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இன்னமும் கெளதம் ராம் கார்த்திக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில், தனது எடை 96 கிலோவில் இருந்து எப்படி சூப்பர் ஸ்லிம் ஆனது என்பது தொடர்பான வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.
சிம்பு போல மாறிட்டாரு: பத்து தல படத்திற்காக சிம்பு தனது எடையை அதிகரித்து இருந்தார். ஆனால், அதன் பின்னர் ஈஸ்வரன், மாநாடு படங்களுக்காக அவர் எப்படி கடுமையாக ஒர்க்கவுட் செய்து குறைத்தாரோ அதே போல மிஸ்டர் எக்ஸ் படத்துக்காக தனது உடலை வேறலெவலில் மாற்றியமைத்துள்ள வீடியோவை கெளதம் ராம் கார்த்திக் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். வரும் ஏப்ரல் 17ம் தேதி மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
அண்டர்வாட்டரில் ஆர்யா சாகசம்: முன்னதாக இந்த படத்துக்காக நடிகர் ஆர்யா 20 அடி ஆழ நீச்சல் குளத்தில் நடத்திய அண்டர்வாட்டர் சீக்வன்ஸ் காட்சி தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டு பரபரப்பை கூட்டியது. துரந்தர் 2 படத்தின் இறுதி காட்சியிலும் ரன்வீர் சிங் அண்டர்வாட்டர் சீக்வென்ஸில் மிரட்டியிருப்பார்.


Click it and Unblock the Notifications











