சர்ச்சையில் சிக்கும் சிம்புவின் திரைப்படம்.. இயக்குனர் அதிரடி மாற்றமா?
சென்னை : சில வருடங்களுக்கு முன்பு கன்னட மொழியில் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வந்தது.
சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்த திரைப்படம் போலீஸ் கதையை மையமாக கொண்டு விறுவிறுப்பான கதைக்களத்தை பற்றியது.
கன்னடத்தில் இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நார்தன், தமிழிலும் இயக்கி வருகிறார் என்ற செய்தி வெளியாகியிருந்த நிலையில் இப்போது திடீரென விலகியது சர்ச்சையை உண்டாக்கி இருக்கும் நிலையில் புதிதாக பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் இந்த திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதுமுக இயக்குனர்
கன்னடத்தில் அதிரடி ஆக்ஷன் கதை களத்தை கொண்டு விறுவிறுப்பான திரைக்கதையில் உருவான மஃப்டி திரைப்படத்தை புதுமுக இயக்குனர் நார்தன் இயக்கிய இருக்க நடிகர் சிவராஜ்குமார் இதில் கதாநாயகனாக கலக்கியிருந்தார்.

தமிழில் ரீமேக்
போலீஸ் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருந்த இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தமிழில் ரீமேக் செய்யப்படுவதாகவும் அதில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஞானவேல்ராஜா தயாரித்து
கன்னடத்தில் மஃப்டி திரைப்படத்தை இயக்கிய அதே இயக்குனர் தமிழிலும் இயக்கி வர, இதனை பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்து வந்தார். முக்கியமான சில காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு வந்த நிலையில் தமிழ் ரீமேக்கில் இருந்து இயக்குனர் நார்தன் அதிரடியாக விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

சில்லுனு ஒரு காதல்
மஃப்டி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்போது கேஜிஎப் புகழ் யாஷ் நடித்து வரும் புதிய திரைப்படத்தை இயக்குவதில் மும்முரம் காட்டி வரும் இயக்குனர் நார்தன் மஃப்டி திரைப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படும் தகவலையடுத்து இதில் முக்கிய திருப்பமாக சூர்யாவின் "சில்லுனு ஒரு காதல்" திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா இந்த திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கிருஷ்ணா இயக்குவாரா
சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் சர்ச்சைகளைத் தொடர்ந்து, மஃப்டி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்த சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த வேதனையில் இருந்து வரும் நேரத்தில், சுசீந்திரனின் இயக்கத்தில் பக்கா கிராமத்து கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வரும் ஈஸ்வரன் திரைப்படத்தின் இரண்டு மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும் மஃப்டி திரைப்படத்தை கிருஷ்ணா இயக்குவாரா இல்லையா என்பதைப் பற்றி இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











