ரொமான்ஸ் பண்ணும் முகேன் ராவ்... “மதில் மேல் காதல்“ ஃபர்ஸ்ட் லுக் !

சென்னை : பிக் பாஸ் முகேன் ராவ் நடிக்கும் மதில் மேல் காதல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

அசத்தலான அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களின் மனதில் இடம் பிடித்த முகேன் ராவ், தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கினார்.

வேலன்

வேலன்

பிக்பாஸ் மூலம் கவனம் ஈர்த்த முகேன் ராவ் வேலன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை கவின் இயக்குகிறார். பிரபு, சூரி, தம்பி ராமையா, மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

குடும்ப சென்டிமென்ட்

குடும்ப சென்டிமென்ட்

சமீபத்தில் வேலன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலானது. நகைச்சுவை மற்றும் குடும்ப சென்டிமென்ட் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தில் சூரி மலையாளியாக நடிக்கிறார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

மதில் மேல் காதல்

மதில் மேல் காதல்

இந்நிலையில், முகேன் ராவின் அடுத்த திரைப்படமான மதில் மேல் காதல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அதில் முகேன்ராவ் சோப் நுரையுடன் இருக்க காதலி கன்னத்தில் முத்தமிடுகிறார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Recommended Video

இந்த படத்துக்கு ஏன் சபாபதி TITLE வச்சோம் ? | Director Srinivasa Rao Exclusive | Filmibeat Tamil
பல நடிகர்கள்

பல நடிகர்கள்

இப்படத்தை ஷீரடி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்க உள்ளார். முகேன் ராவ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஜீவி பிரகாஷின் பேச்சுலர் படத்தின் கதாநாயகி திவ்யபாரதி நடித்துள்ளார். மேலும் சாக்ஷி அகர்வால், விஜய் டிவி பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X