ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்.. நம்பர் 1 பணக்காரர் வராராம்.. கலந்துகொள்ளும் பிரபலங்கள் லிஸ்ட்

சென்னை: விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் வரும் 26ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. உதய்பூரில் திருமணத்தை வைத்துவிட்டு மார்ச் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் ரிசப்ஷனை நடத்தவிருக்கிறார்கள். திருமணத்தில் பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என கூறப்பட்ட சூழலில் இப்போது பல பிரபலங்கள் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யார் யார் கலந்துகொள்கிறார்கள் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

ரக்‌ஷித் ஷெட்டியுடனான காதல் முறிவுக்கு பிறகு தனது கரியரில் முழு கவனம் செலுத்திய ராஷ்மிகா மந்தனா; விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இரண்டு பேரும் ஒன்றாக ரெஸ்டாரன்ட் செல்வது, வெளிநாடுகளுக்கு செல்வது என தீவிரமாக காதலித்தார்கள். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி அவர்களுக்கான காதலை ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டின.

கடந்த வருடத்தில் நிச்சயதார்த்தம்: ரசிகர்கள் தொடர்ந்து அவர்களது காதல் குறித்து பேசினாலும்; சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் எதுவும் சொல்லாமல் அமைதி காத்தார்கள். அதோடு மட்டுமின்றி கடந்த வருடத்தில் ரகசியமாக நிச்சயதார்த்தமும் செய்துகொண்டார்கள். அந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த சூழலில் இரண்டு பேருக்கும் எப்போது திருமணம் என்ற கேள்வி எழ தொடங்கியது.

Mukesh Ambani Allu Arjun to Attend Vijay Deverakonda-Rashmika Wedding Latest Update
Photo Credit:

26ஆம் தேதி திருமணம்: அந்த கேள்விக்கு பதில் கொடுக்கும் விதமாக சில நாட்களுக்கு முன்பு இரண்டு பேரின் திருமண பத்திரிகை வெளியானது. அதில் பிப்ரவரி 26ஆம் தேதி உதய்பூரில் திருமணம் நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த அழைப்பிதழில் விஜய் தேவரகொண்டா, "எங்கள் வாழ்க்கையில் முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். எங்கள் குடும்பங்களின் ஆசீர்வாதங்களுடன் நானும், ராஷ்மிகாவும் 26ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறோம்.

Also Read
லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைந்த அந்த இயக்குநர்.. அல்லு அர்ஜுன் படத்தில் சம்பவம் இருக்குமா?
லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைந்த அந்த இயக்குநர்.. அல்லு அர்ஜுன் படத்தில் சம்பவம் இருக்குமா?

புதிய அத்தியாயத்தை தொடங்குகிறோம்: எங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் இந்த நேரத்தில் எங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருடனும் இந்த மகிழ்ச்சியை கொண்டாடி இனிய நினைவுகளை உருவாக்க விரும்புகிறோம். உங்கள் வருகையும், ஆசீர்வாதங்களும் எங்களுக்கு மகிச்சியையும், அர்த்தத்தையும் கொடுக்கும்" என புது மாப்பிள்ளை தேவரகொண்டா கூறியிருந்தார்.

திருமணத்தில் ரூல்ஸ்: இந்தத் திருமணத்தில் கலந்துகொள்பவர்கள் மொபைல் ஃபோனை பயன்படுத்த வேண்டாம் என்றும் மணமக்கள் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி பிரபலங்கள் யாரும் திருமணத்தில் கலந்துகொள்ளமாட்டார்கள் எனவும்; மார்ச் நான்காம் தேதி ஹைதராபாத்தில் நடக்கவிருக்கும் ரிசப்ஷனில் பங்கேற்பார்கள் எனவும் ஒரு பேச்சு ஓடியது. இந்நிலையில் அவர்கள் திருமணம் பற்றி புதிய தகவல் ஒன்று வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.

முகேஷ் அம்பானி வருகை?: அதாவது இத்திருமணத்தில் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் கலந்துகொள்ளவிருக்கிறாராம். அம்பானி குடும்பத்தினர் மட்டுமின்றி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினர் முதற்கொண்டு ஏகப்பட்ட தெலுங்கு திரையுலக பிரபலங்களும் இத்திருமணத்தில் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிகிறது. அப்போ திருமணம் செமயாக களைகட்டப்போகிறது என இரண்டு பேரின் ரசிகர்களும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X