Kubera Box Office Predction: குபேரா டிக்கெட் புக்கிங் மல்டிபிளக்ஸ்களிலும் ஓபன்.. முதல் நாள் வசூல் கணிப்பு!

சென்னை: பிவிஆர், ஏஜிஎஸ், சினிபொலிஸ் உள்ளிட்ட மல்டி பிளக்ஸ் திரையரங்குகளிலும் குபேரா படத்தின் டிக்கெட் புக்கிங் ஒருவழியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், காலை 9 மணி காட்சிகள் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஓபன் ஆகாமல், 11 மணியில் இருந்து தான் படம் ஆரம்பிக்கும் என அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

கமல்ஹாசனின் தக் லைஃப் படத்துக்கு கடைசி நேரத்தில் சிறப்புக் காட்சிக்கான அனுமதி வழங்கப்பட்டதை போல தனுஷ் நடித்துள்ள குபேரா படத்துக்கும் சிறப்புக் காட்சிகளுக்கான அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Multiplexes opens Kuberaa ticket booking and here we look about for Day 1 Box Office prediction
Photo Credit:

ரோகிணி, காசி, மாயாஜால் உள்ளிட்ட தியேட்டர்களில் காலை 9 மணிக்கான டிக்கெட் முன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில், நாளை வெளியாகும் குபேரா படத்தின் வசூல் படத்திற்கு கிடைக்கும் மவுத் டாக் மற்றும் விமர்சனங்கள் மூலம் தான் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 ஆண்டு கால உழைப்பு: இயக்குநர் சேகர் கம்முலா தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல், கடந்த 3 ஆண்டுகளாக இந்த படத்தை செதுக்கி எடுத்து வந்திருக்கிறார். 3.15 மணி நேரம் படம் ஓடும் என்கிற அறிவிப்பு தியேட்டர் ஓனர்களை கடுப்பாக்கிய நிலையில், கடைசியாக 3 மணி நேரம் தான் படம் ஓடும் என்கின்றனர். ஆனாலும், பல திரையரங்குகளிலும் 5 காட்சிகளுக்கு பதில் தற்போது 4 காட்சிகள் மட்டுமே திரையிடப்படும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால், படத்தின் ஓபனிங் வசூல் பெரிதும் அடிவாங்கும் என்கின்றனர்.

மல்டி பிளக்ஸ் டிக்கெட் புக்கிங் ஆரம்பம்: சென்னையில் தனுஷ் நடித்த குபேரா படம் பிவிஆர் உள்ளிட்ட மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கப்படாமல் இருந்து வந்த நிலையில், சற்றுமுன் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள், பெரும்பாலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படம் பார்ப்பதை விரும்பி வரும் நிலையில், இனிமேல் டிக்கெட் புக்கிங் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குபேரா முதல் நாள் வசூல் தேறுமா?: வட அமெரிக்காவில் ஒளிபரப்பாகவுள்ள ப்ரீமியர் காட்சிக்கான டிக்கெட் புக்கிங் மூலம் 1.8 கோடி ரூபாய் வசூலை குபேரா படம் வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா முழுவதும் டபுள் டிஜிட்டில் படத்தின் வசூல் முதல் நாளே வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிக்கெட் புக்கிங் தொடர்ந்து டல் அடித்து காணப்படும் நிலையில், லேட்டஸ்ட் அப்டேட்டாக 6 முதல் 8 கோடி வரை முதல் நாள் வசூல் வரும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.

பாசிட்டிவ் விமர்சனம் வந்தால் தான்: ஏற்கனவே இந்த வாரம் வெளியாகும் அதர்வாவின் டிஎன்ஏ படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், அந்த படத்தை பார்க்க ரசிகர்கள் டிக்கெட் புக்கிங் செய்ய தொடங்கி விட்டனர். தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள குபேரா படம் நாளை வெளியாகி பிளாக்பஸ்டர் விமர்சனங்கள் வந்தால் தான் படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்றும் இல்லையென்றால் தக் லைஃப் நிலைமை தான் இந்த படத்துக்கும் என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் உச்சகட்ட டென்ஷனில் உள்ளனர். சேகர் கம்முலா இயக்கம், தனுஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா நடிப்பு உள்ளிட்டவை படத்தை பார்க்க ரசிகர்களை தியேட்டருக்கு கண்டிப்பாக வரவழைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X