கேரளாவில் இருந்து மும்பை போய் போலீசிடம் திட்டு வாங்கிய துல்கர்: காரணம் ஒரு நடிகை
Recommended Video

மும்பை: செல்போனில் மெசேஜ் அனுப்பிக் கொண்டே கார் ஓட்டிய துல்கர் சல்மானை மும்பை போலீசார் கண்டித்துள்ளனர்.
துல்கர் சல்மானும், சோனம் கபூரும் சேர்ந்து ஜோயா ஃபேக்டர் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்கள். அந்த படப்பிடிப்பின்போது எடுத்த வீடியோ ஒன்றை சோனம் கபூர் ட்விட்டரில் வெளியிட்டார்.
சோனம் வெளியிட்ட வீடியோவை பார்த்த மும்பை போலீசார் கோபம் அடைந்து துல்கர் சல்மானை கண்டித்துள்ளனர்.
துல்கர் சல்மான்
சோனம் கபூர் வெளியிட்ட வீடியோவில் துல்கர் சல்மான் செல்போனில் மெசேஜ் அனுப்பிக் கொண்டே கார் ஓட்டுகிறார். அதை பார்த்து சோனம் கபூர் அவரை கடிந்து கொள்கிறார். இந்த வீடியோவை ட்விட்டரில் பார்த்த மும்பை போலீசார் கோபம் அடைந்து துல்கர் சல்மானை கண்டித்துள்ளனர். ரீல் வாழ்க்கையில் கூட இது போன்ற செயலை அனுமதிக்க மாட்டோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீஸ்
மும்பை போலீசார் தன்னை கண்டித்து போட்ட ட்வீட்டை பார்த்த துல்கர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, இதை ட்வீட் செய்யும் முன்பு உண்மையை அறிந்திருந்தால் பாராட்டியிருப்பேன். மும்பை போலீசார் ஷூட்டிங்கிற்கு அனுமதி அளித்து எங்களுடன் இருந்தனர். அடுத்த ட்வீட்டில் ஷூட்டிங் வீடியோவை வெளியிடுகிறேன் என்றார்.
வீடியோ
துல்கர் காரை ஓட்டவே இல்லை. டிரக் தான் அந்த காரை இழுத்துச் சென்றுள்ளது. இந்த உண்மையை தெரிவிக்கும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் துல்கர் சல்மான்.
பாதுகாப்பு
அவசரப்பட்டு துல்கர் சல்மானை கண்டித்தது தவறு என்பதை போலீசார் புரிந்து கொண்டனர். அவர்களின் அக்கறைக்கு சோனம் கபூர் நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











