twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா ‘கோ‘னு விரட்டுனா.. போய்விடுமா.. விஷ்ணு விஷால் கிண்டல் !

    |

    சென்னை : முண்டாசுபட்டி படத்தின் மீமை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஷ்ணு விஷால்.

    Recommended Video

    Vishal Vishal Jwala Gutta Announced Marriage date | Lock Down

    கொரோனா தொற்றை எதிர்க்க இந்திய அரசு மிக பெரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் பலர் பொறுப்பு இல்லாமல் கோ கொரோனா என்றால் நோய் தொற்று போய் விடும் என்று அலட்சியமாக சமூக வலைத்தளங்களில் பேசியும், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து வருகின்றனர்.

    தொப்புளை காட்டி காதலில் விழுந்துவிட்டதாக கூறிய நடிகை.. துப்பாத குறையாக கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!தொப்புளை காட்டி காதலில் விழுந்துவிட்டதாக கூறிய நடிகை.. துப்பாத குறையாக கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

    Mundasupatti meme Vishnu Vishal shared on Twitter

    இதைப்பார்த்து கடுப்பான விஷ்ணு விஷால், கோ கொரோனா என்றால், கொரோனா போய்விடுமா இது அறியாமையின் உச்சமாகத் தெரிகிறது. இதை பார்க்கும் போது சிரிக்கத் தான் தோன்றுகிறது என்று கூறி, முண்டாசுபட்டி படத்தில் வரும் காமெடி குறித்து ரசிகர் ஒருவர் செய்த மீமை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

    இந்த படத்தில் ஒரு காட்சியில் முண்டாசுபட்டி ஊர் முழுக்க 'திரும்பிபோ' என்று வீட்டு கதவுகளில் எழுதியிருப்பார்கள், இதை பார்க்கும் காளி வெங்கெட் அதை விசாரிப்பார் அதற்கு ஊர் மக்கள் இப்படி செய்தால் வீட்டிற்கு வரும் காட்டேரி உள்ளே வராது என்று கூறுவார்கள். இந்த நகைச்சுவையான காட்சியை தற்போது மீமாக மாற்றியுள்ளனர். சமூக வலைத்தள வாசிகளும் சரி மற்றும் சரியான விழிப்புணர்வு அற்ற மக்களும் 'கோ கொரோனா' என்று கூறி ரோடுகளிலும் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.

    இப்படி விழிப்புணர்வு இல்லாதவர்களை இந்த மீமின் வாயிலாக கிண்டல் செய்துள்ளனர். இந்த மீமை பகிர்ந்துள்ள நடிகர் விஷ்ணு விஷால் முண்டாசுபட்டி படத்தில் நடித்த காளி வெங்கெட் மற்றும் இயக்குனர் ராம்குமாருக்கும் இதை டேக்செய்து இந்தியா முழுவதும் முண்டாசுபட்டி நேரம் போய் கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

    இதை தவிர்த்து தன் சமூக வலைத்தள பக்கங்கள் முழுக்க கோ கொரோனா என்று தீ பந்தங்களை ஏந்தி வெடி வெடித்து ஊர் சுற்றுபவர்களை தொடர்ந்து கிண்டல் செய்துள்ளார் விஷ்ணு விஷால். பிரதமர் மோடி வீட்டில் இருந்த படி மின் விளக்குகளை அனைத்து மற்றும் ஒளி தரும் டார்ச்லைட்களை அகல் விளக்கு போன்ற பொருட்களை ஏற்ற சொன்னார். பலர் ஏன் அதை புரிந்து கொள்ளாமல் இப்படி கூட்டம் கூடியுள்ளனர் இது தீபாவளி கிடையாது என்று கடுமையாக கூறியிருக்கிறார்.

    Mundasupatti meme Vishnu Vishal shared on Twitter

    கொரானவை எதிர்த்து நாடே போராடி வரும் நிலையில் இந்த மாதிரியாக சிலர் செய்வது, விவரம் தெரியாத மக்களை பாதிக்கும். இவர்கள் இந்த நோயின் தன்மையை புரிந்து கொள்ள முடியாமல் கூட போகலாம் இந்த மாதிரியான விசயங்களை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

    பாரத பிரதமர் மோடி கேட்டு கொண்ட படி நாடு முழுதும் மக்கள் தங்கள் வீடுகளின் மின் விளக்கை அனைத்து டார்ச் லைட் மற்றும் அகல் விளக்கை ஏற்றி ஒற்றுமையை நிரூபித்தனர். இதே போல நடிகர் விஷ்ணு விஷாலும் தனது வீட்டு மாடியில் நின்றபடி டார்ச் லைட் அடித்து தனது ஒற்றுமையை காட்டியுள்ளார்.

    English summary
    Mundasupatti meme Vishnu Vishal shared on Twitter
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X