SK21 Movie : எஸ்கே21 படம் கதை கமல்ஹாசனுக்கும், எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு.. ஜிவி பிரகாஷ் அப்டேட்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வருகிறது SK21 படம். சிவகார்த்திகேயன் ராணுவ வீரர் கேரக்டரில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
படம் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தில் விஸ்வரூபம் படத்தின் அதிரடி வில்லன் ராகுல் போஸ் மிரட்டலான வில்லனாக இணைந்துள்ளார். மேலும் ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
படம் மிகவும் அழகான ஸ்கிரிட்டாக உருவாகியுள்ளதாக அவர் தனது சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். SK21 படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் லீக்காகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், தற்போது மிகுந்த பாதுகாப்புடன் படத்தின் சூட்டிங்கை படக்குழுவினர் எடுத்து வருகின்றனர். இந்தப் படத்தை தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகச்சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே 21 படத்தில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
படத்தில் இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது- இந்நிலையில் படம் குறித்து பேசியுள்ள படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இந்தப் படம் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகி வருவதாக கூறியுள்ளார்.
விரைவில் டீசர்: படம் பயோபிக்காக உருவாகிவரும் சூழலில் விரைவில் படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். இந்த டீசர் வெளியானவுடன் படம் குறித்து ரசிகர்களுக்கு அதிகமான விஷயங்கள் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினமும் படத்தின் சூட்டிற்காக ஒரு பாடலை அனுப்பி வைத்துள்ளதாகவும் படத்தில் வித்தியாசமான வாய்ஸ்களை பாடல்களுக்காக தான் பயன்படுத்தியுள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் மேலும் கூறியுள்ளார். இந்த வாய்ஸ் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ரீச் ஆகும் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
கமலுக்கு பிடித்த கதை: படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் இதேபோல படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கும் இந்தக் கதை மிகப்பெரிய அளவில் பிடித்துள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். கோலிவுட்டில் மிக அதிகமான திறமை கொண்டவராக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளதாகவும் இந்தப் படம் ரிலீசானவுடன் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கோலிவுட்டில் கிடைக்கும் என்றும் ஜிவி பிரகாஷ் மேலும் தெரிவித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத எஸ்கே 21 படத்தின் சூட்டிங் 3 மாதங்கள் காஷ்மீரில் நடத்தப்பட்ட நிலையில் அடுத்தடுத்து சென்னை, பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும் நடத்தப்பட்டுள்ளது.
ராணுவ வீரராக சிவகார்த்திகேயன்: படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள நிலையில் காஷ்மீரில் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர் குளிர் மற்றும் கடுமையான பனிக்கிடையில் 3 மாதங்கள் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. இதனால் படத்தின் பட்ஜெட் நினைத்ததை காட்டிலும் அதிகமானதாகவும் இதனால் தற்போது படத்தின் எஞ்சிய காட்சிகளை பட்ஜெட் பிரெண்ட்லியாக படக்குழுவினர் எடுத்து வருவதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகின. இதற்கேற்ப தற்போது சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படத்தின் எஞ்சிய காட்சிகளின் சூட்டிங் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











