GV Prakash: நான் சினிமா காதலன்.. அடுத்தடுத்த களங்களில் ரூட் போடும் ஜிவி பிரகாஷ்!
சென்னை: நடிகர். தயாரிப்பாளர். இசையமைப்பாளர் என கோலிவுட்டில் பன்முகம் காட்டி வருகிறார் ஜிவி பிரகாஷ். தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் இவர் இசையமைத்து வருகிறார். தமிழில் வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷுக்கு அந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டாகி சிறப்பாக கை கொடுத்தது. தொடர்ந்து பொல்லாதவன், அங்காடித்தெரு, ஆயிரத்தில் ஒருவன், தெய்வத்திருமகள், ராஜா ராணி, விசாரணை, தெறி, அசுரன், மிஷன் சாப்டர் ஒன், சைரன் என இவரது அடுத்தடுத்த படங்கள் மிகச்சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளன.
தொடர்ந்து 100 படங்களுக்கு இசையமைத்து முடித்துள்ளார் ஜிவி பிரகாஷ். இசை அசுரன் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் முன்னதாக டார்லிங் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகம் ஆனார். தொடர்ந்து த்ரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை, பேச்சிலர், ஜெயில் என அடுத்தடுத்த ஹிட் படங்கள் கொடுத்து அசத்தியுள்ளார். ஒரே நேரத்தில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரட்டை குதிரையில் சவாரி செய்து வரும் ஜிவி பிரகாஷ் தயாரிப்பாளராகவும் கிங்ஸ்டன் படம்மூலம் மீண்டும் மாறியுள்ளார். இதனிடையே இயக்குனர் பாலாவின் நாச்சியார் படத்தில் நடித்ததன் பின்பே தனக்கு தன் நடிப்பின்மீது அதிக நம்பிக்கை வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்: நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் கோலிவுட்ல வலம் வந்து கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இதுவரை 100 படங்களை கடந்து இவர் இசையமைத்து முடித்துள்ளார். தன்னுடைய 19வது வயதிலேயே வெயில் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக இவர் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். தொடர்ந்து பொல்லாதவன், ஆயிரத்தில் ஒருவன், தெறி, விசாரணை, ராஜா ராணி, தெய்வத்திருமகள் என இவர் இசையமைத்த அதிகமான படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. சிறுவனாக இருந்த போதே ஜென்டில்மேன், பம்பாய், ஆசை உள்ளிட்ட படங்களில் பாடியிருக்கிறார்.
சினிமா என்ட்ரி: படிப்பை முடித்தவுடன் சவுண்ட் இன்ஜினியரிங் படித்த ஜிவி பிரகாஷ் தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ், ஏஆர் ரகுமான் உள்ளிட்டவர்களின் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். ஒரு கட்டத்தில் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான வெயில் படம் மூலம் இசை அமைப்பாளராக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். டார்லிங் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் மாறிய ஜிவி பிரகாஷ், தொடர்ந்து த்ரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை, பேச்சிலர், ஜெயில் உள்ளிட்ட அடுத்தடுத்து 25 படங்களில் நடித்து முடித்துள்ளார். துவக்கத்தில் காமெடி படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.

நாச்சியார் படம் கொடுத்த நம்பிக்கை: பாலாவின் நாச்சியார் படத்தில் சீரியஸான கேரக்டரில் தான் நடித்தது தன் மீதான இமேஜை மாற்றியது மட்டும் இல்லாமல் தனக்கும் நடிப்பின் மீது நம்பிக்கை ஏற்பட காரணமாக அமைந்ததாக ஜிவி பிரகாஷ் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தன்னுடைய நடிப்பால் தன்னுடைய இசைப்பணி பாதிக்காதவண்ணம் தான் தொடர்ந்து திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். தான் இசையமைப்பாளராக அறிமுகமானபோது முதலில் பாடுவதற்கு தனக்கு தயக்கம் இருந்ததாகவும் ஆனால் ஆடுகளம் படத்தில் யாத்தே யாத்தே என்ற பாடலை தான் பாடி அது ஹிட் ஆனதும் தன்னுடைய தயக்கம் உடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரட்டை சவாரி: மேலும் நடிப்பு, இசை இரண்டிற்குமே தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் ஜிவி பிரகாஷ். அடுத்ததாக கிங்ஸ்டன் என்ற படத்தை நடித்து தயாரித்து வருகிறார். முன்னதாக மதயானை கூட்டம் என்ற படத்தையும் இவர் தயாரித்துள்ளார். தொடர்ந்து பேசிய ஜிவி பிரகாஷ், தான் சினிமாவின் காதலன் என்றும் அதுதான் அடுத்தடுத்த நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் என பல தளங்களில் தான் தொடர்ந்து உழைக்க காரணமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனுஷ் படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாக மனம் திறந்துள்ள ஜிவி பிரகாஷ், ஆனால் அது நடக்காமல் போனதாகவும் இனிவரும் நாட்களில் நிச்சயம் அப்படி ஒரு கேரக்டரில் தான் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் அவதாரம்: இதனிடையே சினிமாவில் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் அப்படி உழைத்துக் கொண்டே இருந்தால் சினிமா ஒரு கட்டத்தில் நமக்கு அள்ளிக் கொடுக்கும் என்றும் நேர்மையாக உழைத்தால் சினிமா கைவிடாது என்றும் தன்னுடைய பேட்டியில் ஜிவி பிரகாஷ் மனம் திறந்து பேசியுள்ளார். அடுத்ததாக ரெபல், கள்வன், கிங்ஸ்டன் ஆகிய படங்களில் படங்கள் இவரது நடிப்பில் ரிலீசாக உள்ளன 13 என்ற படத்தில் இவர் நடித்து வருகிறார். இதனிடையே வரும் ஏப்ரல் 4ம் தேதி கள்வன் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் புகைப்படங்களை தயாரிப்பு தரப்பு பகிர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











