இசை தான் என் உணவு... காதல்... வாழ்க்கை... எல்லாமுமே: தனுஷ்
சென்னை: இசை தன் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது என்றும், இசை இல்லாவிட்டால் தான் அழிந்து போய் விடுவதாகவும் தனுஷ் கூறியுள்ளார்.
மயக்கம் என்ன?. 3, எதிர்நீச்சல் போன்ற படங்களில் சில பாடல்களை எழுதி, அவற்றைப் பாடவும் செய்தார் நடிகர் தனுஷ்.
குறிப்பாக, தனுஷ் பாடிய 'ஒய் திஸ் கொலைவெறி?' பாடல் அவரது குரலை மிகவும் பிரபலப்படுத்தியது. இந்நிலையில், சமீபத்தில் 'இனி கொலைவெறி போன்ற பாடலி இனி நான் பாடப் போவதில்லை' என அதிரடியாக அறிவித்தார் தனுஷ்.

ஆறுதல் தந்த தனுஷ்...
இதன் மூலம், தனது இசைப் பயணத்திற்கே தனுஷ் முழுக்குப் போட்டு விடுவாரோ என ரசிகர்கள் அஞ்சிய வேளையில், அவர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக தனுஷ் பேசியுள்ளார். அதில், இசை என் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளது. இசை இல்லாவிட்டால் நான் அடியோடு அழிந்து விடுவேன்' எனத் தெரிவித்துள்ளார் தனுஷ்.

இசை தான் என் டானிக்...
தனது ஒவ்வொரு செயலிலும் இசை பிணைந்திருப்பதாகவும், தன் தலைக்குள் எப்போதும் ஒரு இசை அமர்ந்து கொண்டு தன்னை உற்சாகப் படுத்துவதாகவும் கூறியுள்ளார் அம்பிகாபதி நாயகன்.

எல்லாமே எனக்கு இசைதான்...
மேலும், ‘இசை தான் என் உணவு, என் காதல், என் வாழ்க்கை, எல்லாமுமே' என உணர்ச்சி பொக்கத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











